பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 என்னும் நேரத்தில் அனுமனால் கொல்லப்பட்டனர். இறந்த வர்களின் உயிர்கள். எல்லாம் எமன் உலகம் சென்றன. ஒவ்வொருவர் உயிரையும் ஒவ்வொரு எமதுாதர் பிடிப்ப தெனில், எமனுக்கு ஆயிரம் கோடித் தூதர்கள் உள்ளனர் போலும்! 'காய் எரி முளிபுல் கானில் கலந்தென, காற்றின் செம்மல் ‘ஏ’ எனும் அளவில் சொல்லும் நிருதர்க்கு ஒர் எல்லை இல்லை; போயவர் உயிரும் போகித் தென்புலம் படர்தல் பொய்யாது; ஆயிரங் கோடி தூதர் உளர்கொலோ நமனுக்கு அம்மா!' (26) எமதுரதர் வந்து உயிரைப் பிடித்துச் செல்லுவதாகச் சொல்வது வழக்கம். ஓர் உயிருக்கு ஒரு தூதன் எனில், எமனது. அலுவலகத்தில் எத்தனை தூதர்கள் பணிபுரி கின்றனரோ, தெரியவில்லையே-என அயர்ந்து விட்டிருக் கிறார் கம்பர். இந்திர சித்தின் தம்பியான அக்ககுமாரனும் ஒரே நாளில் பலரைக் கொல்லக் கற்ற அனுமனும் எதிரெதிர் நின்று கடும்போர் புரிகின்றனர். இமைக்காத (மூடித்திறக்காத -திறந்து கொண்டேயிருக்கின்ற) கண்களை உடைய தேவர் கள், போரைக் கண்டு அனுமனுக்கு என்ன நேருமோ எனக் கசிந்து, இமைக்காத-மூடாத கண்களைப் பெற்ற நமக்கு இது ஒரு நல்வாய்ப்பு ஆகும்-தொடர்ந்து போரைப் பார்க்க முடிகிறதல்லவா என்று எண்ணி இரு பக்கமும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனராம், 'உற்றான் இந்திர சித்திக்கு இளையவன்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக் கற்றானும் முகம் எதிர் வைத்தான்; அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார்;