பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 எற்றாம் மாருதி நிலை என்பார்; இனி இமையா விழியினை இவை ஒன்றோ பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர்; பிரியாது எதிரெதிர் செறிகின்றார்' (32) தேவர்கள் கண் இமைக்கார் என்ற கருத்தை வைத்துக் கொண்டு கம்பர் இந்தப் பாட்டில் விளையாடியுள்ளார். அனுமனுக்கு அஞ்சிய அரக்கர் பலர், தாம் உயிர் பிழைக்கப் பல்வேறு மாற்றுருவங்கள் எடுத்துத் தப்பித்துக் கொண்டதைக் கம்பர் நகைச் சுவையுறப் படைத்துக் காட்டியுள்ளார்: சிலர் மீனாகிக் கடலில் புக்காராம்; சிலர் பசு உருக் கொண்டு வழியில் மேயத் தொடங்கினராம்; சிலர் ஊன் (மாமிசம்) தின்னும் பறவை வடிவெடுத்து ஆங்குள்ள உடல்களைக் கொத்தினராம்; சிலர் பார்ப்பன உருவெடுத் தனராம்; சிலர் பெண்வடிவங் கொண்டு தம் கூந்தலை வகிர்ந்து கொண்டிருந்தாராம், சிலர் ஐயா அனுமனே! யாங்கள் உம் அடைக்கலம்- எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினராம்; சிலர் அசையாமல் நின்று கொண்டு (நாராயணாய நம-நாராயணாய நம என்பதுபோல்) திருமாலின் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டு திருமால் அடியவர்கள்போல் நடித்தனராம். சிலர் தம் மனைவியரும் உறவினரும் வந்து தம்மைக் கட்டிக்கொண்டு அழுதபோது, ஐயையோ-யாங்கள் உங்கள் உறவினர்கள் அல்லர், போர் காணவந்த தேவர்கள் என்று சொல்லி அவர்களை உதறித் தள்ளி அப்பால் சென்றனராம்; சிலர் நாங்கள் அரக்கர் அல்லர்-மனிதர்கள் என்றனராம்; சிலர்வண்டு வடிவம் எடுத்துப் பொழில்களில் சென்று தங்கினராம்; சிலர் மயக்கம் கொண்டவர்போல் படுத்துக் கொண்டனராம்; சிலர் தம் அரக்கக் கோரைப் பற்களை ஒடித்து மனிதப் பற்கள் போல் ஆக்கிக் கொண்டன