பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 க"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறஅ தீரும் எம்.அம்பு கடிவிடுதும் நும்மாண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை..." (9:1–6) என்னும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம். அனுமனும் அறப்போர் புரிபவன் ஆதலின், பசு-பாாப்பனர் பெண்டிர்-போன்ற வடிவம் எடுப்பின் ஒன்றும் செய்யான் என எண்ணிச் சில அரக்கர்கள் அவ்வாறு செய்ததாகப் புறநானூறு படித்துள்ள கம்பர் புகன்றுள்ளார். (பாசப் படலம்) இந்திரசித்தை வீரத்தின் பன்மை தீர்ப்பான்’ (13) என்று கம்பர் குறிப்பிட்டுள்ளார். வீரம் பலர்க்குப் பொது வானது அன்று; இந்திரசித்து ஒருவனுககே உரியது என்று சொல்லும் அளவுக்கு அவன் மிக்க வீரம் உடையவன் என்ற கருத்தில் கம்பர் இவ்வாறு புனைந்துரைத்துள்ளார். இது உயர்வு நவிற்சியணி, இங்கே பன்மை' என்பது பொதுமை’ என்னும் பொருளது. உலகம் பல மன்னர் கட்குப் பொதுவாய் இன்றி, ஒரு மன்னனுக்கே உரியது என்னும் கருத்தில், 'தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்’ என்னும் நக்கீரரின் புறநானூற்றுப் பாடல் பகுதியில் (189; 1,2) உள்ள பொதுமை’ என்பது போல, இங்கே "பன்மை' என்பதைக் கொள்ள வேண்டும். இந்திர சித்து தன் குடும்பத்தினர்க்கு ஏற்பட்ட இன்னல் களை எண்ணி வருந்துகிறான்: காட்டில் என் அத்தை சூர்ப்பணகைக்கு ஏற்பட்ட மானக்கேடும், கரன் பட்ட