பக்கம்:சுமைதாங்கி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

பலன்

பாடுபடப் பாடுபடப் பலன்தருமே பூமி பசிதீர நாள்தோறும் உழைக்கவேணும் சாமி ஈடுஇணை இல்லாத தொழில்இதனை கம்பி ஏமாந்து போனவர்கள் யாருமில்லை தம்பி (பாடுபட)

இல்லையில்லை என்றுசொல்லி ஏங்கியே குந்தி இருப்பவனைச் சிரிப்பாளே நல்லநில மங்கை தொல்லைகளை ஏற்க அஞ்சும் ஒருகோழை என்றும் சோம்பேறி, செல்வத்தைத் தொடமுடியா ஏழை!

(பாடுபட)

பஞ்சங்கள் பறந்தோட வேண்டுமெனில் பச்சைப்

பயிர்விளையும் பாத்திகளில் நீர்வழிய வேண்டும்.

அஞ்சாமல் களையகற்றி, பூச்சிகளைக் கொன்று அருமையாய் உரமிட்டுக் காவல்காக்க வேண்டும்.

காஞ்சி கரிகாலன் வைகை காவேரி பெண்2ண கோஞ்சலான பழைய நெல்லை மாற்றியே விதைத்து

கண்ணகி கருணு பவானி ஐயாறிருப்து-எட்டு

நோகாமல் நஞ்சையிலே மிகுவிளைச்சல் தருவோம்!

(பாடுபட)

வரிசையுடன் பாரதி சுஜாதா வரலட்சுமி வனிதையரின் பெயரல்ல புனிதமாம் பருத்தி தரிசாகக் கிடக்கின்ற கரிசல்கிலம் எங்கும் தயங்காமல் புதுமையாய்ப் பஞ்சுவிளே விப்போம்!

உருப்படியாய் வாழ்ந்திடவும் ஊட்டமான சத்து வழங்கிடவும் மரவள்ளிக் கிழங்குபயிர் செய்வோம். பருப்புவகை நிரப்பிடுவோம் எண்ணெய்விலை குறைப்போம்! பயன்மிக்க காய்கனிகள் உயர்வாகக் கொய்வோம்.

( பாடுபட)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/101&oldid=692178" இலிருந்து மீள்விக்கப்பட்டது