பக்கம்:சுமைதாங்கி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாய முத்தமொழிச் சொந்தக் காரர்

தமிழரினம் என்பதால்தான் நமது மூன்று கலையாகும் இயலிசையும் கூத்தும் மூச்சு,

கவின்கலையாம் ஒவியமும் சிற்ப மென்னும் கிலேயான படைப்புகளும் காலத் தாலே

நெகிழாத வரலாற்றுச் சான்று கூறும்! அலையாது திரியாது வாழ்வு முற்றும்

அயல்நாடு போகாமல் இன்பங் கூடும்!

வந்துவந்து செல்வோரின் வருமா னத்தில்

- வளம்பெருக்கும் காடுகளும் உலகில் உண்டாம்!

இந்தவகைப் பெருஞ்செல்வம் எவர்க்கு மில்லை;

எடுத்துரைக்கா திருந்ததுதான் நமது குற்றம்!

முந்திசெய்த தவறுணர்ந்து பிற்கா லத்தில்

முழுமூச்சாய்ச் சுற்றுலாவில் கவனங் காட்டிச்

செந்தமிழர் கலம்பாடும் சிறப்பை யெல்லாம்

சிந்தையிலே பிறநாட்டார் கொள்ளச் செய்தோம்!

நான்கு திக்கும் மலை குன்று கோயில் சிற்பம்

கானிலத்தார் அனைவரையும் கவர்ந்தி ழுக்கும். மான்குதிக்கும் கானகத்தில் யானை வேங்கை

மற்றபல விலங்குகளும் இணைந்து வாழும். மீன்குதிக்கும் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்,

வேறெவர்க்கும் கிட்டாத கடலின் செல்வம்! தேன்குடிக்கும் வண்டுகளாய் மதிம யங்கித்

திரிந்துவரச் செய்கின்ற இயற்கை காண்போம்!

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/104&oldid=692181" இலிருந்து மீள்விக்கப்பட்டது