பக்கம்:சுமைதாங்கி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வள்ளல்

அப்பப்பா! சென்றநூற் றண்டில் இந்த

அரியதமிழ் நாட்டினிலே அதற்கு முந்தி எப்போதும் காணுத காற்ற முத்த

இழப்பைநீர் அறிவிரோ? வழக்கம் போல வெப்பத்தின் மிகுதியினுல் விளைந்த தன்று!

மிகவிரைவாய் மண்டிவிட்ட பழைமை எண்ணம், கப்பிகின்ற மடமையிருள் முடகம் பிக்கை,

காலத்தால் ஏற்பட்ட அறிவுச் சூன்யம்!

காற்றழுத்தம் குறைவானல் என்ன நேரும்?

கடல்மீது குளிர்ந்திருக்கும் கனத்த காற்றே ஏற்றமுடன் புயலுருவம் எடுத்துக் காலி

ஏற்பட்ட இடம்நோக்கிப் பாயு மன்றே! மாற்றமின்றி அவ்விதமே தோற்றங் கொண்டு

மகத்தான அருட்சோதிக் கருணை வீச்சால் வேற்றுமைகள், அறியாமை வீழ்ந்து சாய

வெற் றியுடன் இராமலிங்க அடிகள் வந்தார்.

இன்னல்கண் டிரங்குவதில் இயேசு, சூழ்ந்த

எதிர்ப்பினையே இடறுவதில் நபிகள்; மேலாக் தன்னலத்தைத் துறப்பதிலே புத்தன்; தூய

தமிழ்ப்பண்பை நிறுவுவதில் குறளோன்; ஆழ்ந்த தன்னடக்கம் பேணுவதில் காந்தி, பண்டைத்

தவறுகளை மறுப்பதிலே பெரியார், வள்ளல் என்னுமொரு சீர்பெற்ற துறவி. சொன்ன

இ2ணயில்லாச் சன்மார்க்கம் தமிழன் சொத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/105&oldid=692182" இலிருந்து மீள்விக்கப்பட்டது