பக்கம்:சுமைதாங்கி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல்

முப்பாலுக்கு அப்பாலோர் மொழிநூல் இல்லை; முழுதுலகும் ஏற்றுள்ள உண்மை யாகும். இப்பாலை மூன்ருக்கிப் பகுத்துக் காட்டும்

எழிலுடைய இலக்கியமும் உலகில் ஏது? தப்பாமல் திருக்குறளைப் பொருள்புரிந்து

தாமுணர்ந்தார் தடம்பிறழ்ந்த வரலா றில்லை! ஒப்பாரும் மிக்காரும் இல்லா அண்ணு

உன்உரையை நாளெல்லாம் நாடு கேட்கும்:

காமத்துப் பாலென்ருல் கசப்பாய் எண்ணிக்

கானகத்து முனிவரைப்போல் நடித்தோர் கூட "ஆமதற்கு கிகரில்லை' என்றே கெஞ்சில்

ஆதரவு தெரிவிப்பார்! வாழ்க்கை இன்பம் தாமதித்தால் திரும்பிவர முடியா தன்ருே?

தமிழினிலே செறிந்துள்ள அகச்சு வைக்குப் பாமரரும் பொருள்புரியச் செய்தாய் அண்ணு;

பழச்சாறு தேந்தாய்! அதனுல் காங்கள்

சேரத்துச் சிறியதம்பி இளங்கோ யாத்த

சிலம்புதரும் பல்சுவையில் காத இலத்தான் வீரத்தை விடமிகவும் விரும்பிக் கற்ருேம்!

வெறியாட்டாய்க் கடல்கொண்ட பூம்பு காரைத் துாரத்தில் கரைமீதில் புதிதாய்த் தோன்றத்

துரக்கிவைத்து நிறுத்திடவே கனவு கண்டோம்; பாரத்தைச் சுமக்கின்ற கல்லின் சிற்பம்

பழம்பெருமைக் காவியத்தைப் படைத்த தங்கே!

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/110&oldid=692187" இலிருந்து மீள்விக்கப்பட்டது