பக்கம்:சுமைதாங்கி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னிசைத் தமிழர் பாடல் இசையமுது எடுத்துக் கூறும் மன்னிய காதல் துன்பம் மாண்எதிர் பாரா முத்தம் இன்னமும் இயம்புங் காதல் நினைவுகள் என்ற நூலும்; பன்னிற மலர்கள் கூட்டம் பாரதி தாசன் பாட்டே!

பாண்டியன் பரிசு பாடும் பழந்தமிழ்ச் சுவையும் பண்பும் வேண்டிய தொளித்து விட்டு வெறுங்கதை பேசி வீனில் தாண்டிடும் பண்டிதர்க்குச் சாட்டையாம் தமிழியக்கம்! மாண்டுபோம் உள்ளத் திற்கு மருந்தாகி உயிரையூட்டும்

பாரதி தாசன் பாட்டைப் பயின்றிடும் பொழுதென் நெஞ்சில் வீரமும் புரட்சி காணும் வேகமும் தமிழில் பித்தும் தீரமும் புத்து ணர்வும் சீர்திருத் தத்தில் நோக்கும் பூரண் மாகத் தோன்றும் புதுமையை என்ன சொல்வேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/113&oldid=692190" இலிருந்து மீள்விக்கப்பட்டது