பக்கம்:சுமைதாங்கி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10

பேறு

தஞ்சைமா வட்டத்தைச் சார்ந்த வன்யான்;

தமிழ்படிந்த கலைநெஞ்சம் வாய்க்கப் பெற்றேன். விஞ்சுபுகழ் ஆதீனம் மூன்றில் ஒன்றின்

வெளிச்சுற்றுச் சுவரையும்கான் கடந்த தில்லை! அஞ்சிநின்ற ஒருகாலம் உண்டு பின்னர்

அறவெறுப்பால் ஒதுங்கியதே மெய்யாம்! ஏனே? கொஞ்சமேனும் மக்களுக்குப் பயனு ருத

கூட்டமங்கே வாழ்வதெனும் எண்ணத் தாலே!

பின்னுெருநாள் பார்க்கின்றேன்; பேர திர்ச்சி!

பீடுடைய ஆதீன கர்த்தர் என்பார் தன்னிலையை மறந்தாரோ? தமிழ்மக் கட்குத்

தானுமொரு தொண்டனென எண்ணி னுரோ? மின்னலெனும் வாழ்க்கையிது கிலேயா தென்று

மிகமேலாம் பொதுநலத்தில் மூழ்கி ேைரா? முன்னிருந்த நெறிமுறைகள் முற்றும் மாற்றி

முழங்கினரே யாங்கனுமே மேடை தோறும்!

தவத்திருவென் றடைமொழியைத் தாங்கி லுைம்

தாடிமுடி மாலைநீறு தரித்திட் டாலும் இவர்புரட்சித் துறவியென்பேன் இளங்கோ போல,

இனியதமிழ் துறக்காத மாவீ ரர்தாம்! எவர் தமிழைப்-பகுத்தறிவுத் தமிழர் மாண்பை

இடையூறு செயவரினும் எதிர்த்துத் தாக்கித், தவறிழைப்போர் தமைத்திருத்தும்.நக்கீரன் போல்

தமிழர்க்கோர் பெரும்பேருய் வாய்த்த மேலோர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/119&oldid=692196" இலிருந்து மீள்விக்கப்பட்டது