பக்கம்:சுமைதாங்கி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்மேல் எழுத்து தந்தை பெரியார் நண்பர் கவிதை இயற்றுவதில் வல்லவர். அக்கவிதைப் புணேப்பில் மிக்க சுவையும் அரும் கருத்துக்களும் மலிந் திருப்பது மிகுதியும் பாராட்டற்குரியதாகும். இவர் கவி இயற்றுவதில் மாத்திரமல்லாமல் அரும் கருத்துக்கள் கொண்ட வியாசங்கள் எழுதுவதிலும் திறமை கொண்டவர். அரிய கருத்துக்களேயும் சுவைமிக அழகுபடத் தொகுத் திருப்பதுடன் மிக்க எளிய நடையில் வசனம் போல் படித்து உணரும் தன்மையில் தொகுத்திருப்பது மிகுதியும் பாராட்டத் தக்கதாகும். பேரறிஞர் அண்ணு அறிந்ததனே அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே, அறிந்ததுதான் என்துலும் எத்தனே அழகம்மா என்று அறிந் தோரையே மகிழவைக்கும் அருங்கலேயே கவிதையாகும். அணிதெரியும் என்பதற்காய் ஆக்கித் தரப்பட்ட வணிகப் பொருளல்ல இவர் கவிதை. சமூகப்பிணி போக்கும் மருந் தளிக்கின்ருர் கவிதைத்துளி வடிவில். பருகிட இனிப்பதது; உட்சென்றதும் பிணிபோக்கிப் புதுத்தெம்பு தருவதது. இக்கவிதை நூலினைத் தந்தவர் என் நண்பர்! பெருமை அடைகிறேன். இத்தகைய நண்பர்தனப் பெற்றவன் நான் என்பதளுல்! டாக்டர் கலைஞர் - நண்பரது கவிதைகளில் அமைதியான தமிழோட்டத்தை யும் அழுத்தமான கருத்தோட்டத்தையும் சுவைத்து மகிழ்ந் தவன் நான். நண்பர் அவர்கள் தோற்றத்தில் எவ்வள்வு எளியவரோ அவ்வளவு எளிமையுடையவை அவரது கவிதைகள். உளத்தால் எவ்வளவு உறுதி கொண்டவரோ அவ்வளவு உறுதி முழங்குபவை அவரது கவிதைகள் ஒளிவிடும் கருத்துக்கள். இருபது பக்கங்களில் எழுதிக் காட்டிப் புரிய வைக்க வேண்டியவைகளை இரண்டு மூன்று வரிகளிலேயே பட்டுக் கத்தரித்தது போல் பக்குவமாக விளக்கிடும் ஆற்றல் அவருக்கு மிகுதியாக உண்டு. இத்தகைய ஆற்றலுடையாரை நண்பராகப் பெற்றதால் பெருமையடைகிறேன் என்று அறிஞர் அண்ணு அவர்களே புகழ்ந்துவிட். பிறகு நான் என்ன சொல்ல இருக்கிறது என் நண்பரைப்பற்றி! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/122&oldid=838973" இலிருந்து மீள்விக்கப்பட்டது