பக்கம்:சுமைதாங்கி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியஞ்செய் பாவலரோ என்ன த் தேடிக்

கருமுகிலாய்த் திரிகின்ருர் சிலவேண் டாத தாவரம்போல் சழக்கரிடம் தழைத்த போதும்,

சலிக்கின்ற காலத்தால் கருகிப் போவேன். தூவியதோர் பூமழைபோல் சொலல்வல் லார்க்கோ

சுரக்கின்ற கேணியாக மனத்தி ருப்பேன். ஆவியன்ன பயிரும்கான்; களையும் நான?

!றிவுடையீர்; களையைமட்டும் களைய வாரீர் }9ئے

கருவேப்பி 2லமணக்கச் சமையல் செய்து

கட்டாயம் சாப்பிடுமுன் ஒதுக்கு கின்றீர்! தெருவேம்பின் இலைகசக்கும்; கருணை கூர்ந்து

தின்கின்றீர் சர்க்கரைநோய் தீரும் என்றே! கருவாடு மெல்லுகையில் மூக்கை முடிக்

கருமத்தைப் பெருமனதால் முடிக்கின் றீர்கள்! கருவேல முள்வேலி நல்ல காவல்;

கைபட்டால் குத்துமென விலகிச் செல்வீர்!

கருமனியிற் பாவைதான் பார்வை நல்கிக்

கண்களுக்கே எழில்கூட்டும் கருவி யாகும். கருப்பூரம் தானுருகி எரியும் போதில்

கரிகூட மிஞ்சாமல் ஒளிவ ழங்கும். கருமேகம் வடிக்கின்ற கண்ணிர் தானே

கழனித்தாய் கருவுயிர்க்க உதவும் வித்து? கருக்காயே நெல்லைப்போல் தோன்றி லுைம்

கருதவொண்ணுப் பதராகும்; அரிசி யில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/13&oldid=692090" இலிருந்து மீள்விக்கப்பட்டது