பக்கம்:சுமைதாங்கி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கரும்படிஉன் சொல்லெனக்குக் காரி கையே கண்டபடி உளருதே! கடைக்கண் வீசித் திரும்படிஎன் கன்னத்தில் இதழ்ட டிந்தே

தித்திக்கும் படியாகப் படித்தேன் ஊறும் வரும்படியாய் முத்திரையும் தருவா” பென்ருல்...

வ8ளவாயிற் படிவரைக்கும் வருவாள், செல்வாள். துரும்படி என் மாற்றரின் பகைமை யெல்லாம்!

து.ாளாகும் படிமுறிப்பேன், பார்பார்!’ என்பான்.

படிப்படியாய் முன்னேற்றங் காண்ப தன்றிப்

'படாரென்று மேலேற முனைவோர், வீழ்ந்து பொடிப்பொடியாய் நொறுங்கிடுவார் புகழை நோக்கிப் பொச்சரிப்பார் உருப்படியாய் வாழ மாட்டார். அடிப்படையை மிஞ்சுமாறு படிகேட் பாரை

அறியாதார் சொற்படியே கடப்போர் என்பர். நடிப்பதுதான் மிகஅதிகப் படியென் பார்கள்

நயவஞ்சப் பண்புகொண்டார் உறவு கண்டு.

படிமானம் தேவைதான்; அடங்கிச் செல்வோன்

பைத்தியமென் றெண்ணுகின்ற படிவேண் டாமே! படிதாண்டாப் பத்தினியென்றுரைப்ப தாலே

பழிவாங்கிப் பெண்குலத்தை அடக்க லாமோ? படிவேண்டும் எனக்கேட்டால் நூலகத்தார்

பழைய நூலின் பிரதிகளை எடுத்த ளிப்பார். படியாத பாமரர்க்குப் படியாய் நிற்போம்;

பழையபடி கீழ்ப்படியா வண்ணம் காப்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/21&oldid=692098" இலிருந்து மீள்விக்கப்பட்டது