பக்கம்:சுமைதாங்கி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாள்.என்ருல் இலைஎன்றும் பொருளு ரைத்துத்

தமிழ்முன்னேர் பனைஒலைச் சுவடி கண்டார். தாள்எனிலோ காகிதமாம் புரியும், இன் gll,

தன்மையில்ை இவ்விருதாள் ஒன்றே என்போம். தாள்ஒற்றி மைகிறைய வினய்ப் போகும்;

தடங்கலுடன் எழுதுங்கால் உத றித் தள்ளி! தாள்.ஒன்றில் ஒன்று, பத்து நூறு ரூபாய்

தருகின்றர்; பணத்தருமை என்ன ஆகும்?

தாள்.உண்ட தண்ணிரை இளநீ ராக்கித்

தலையாலே தருவதுதான் தென்னைப் பண்பு; தாள்கண்டாள் இராமனது தாளே கண்டு

தாங்கவொனக் காதலுறல் சீதைப் பண்பு; தாள்கொண்ட பாதுகைக்குப் பட்டஞ் சூட்டத்

தலைமீது சுமந்ததுதான் பரதன் பண்பு; தாள்கொண்டு மாவலியின் தலைய முத்தித்

தரைக்குள்ளே அழுத்திடுதல் தெய்வப் பண்பா?

தாள்களிலே பல்வகைத்தாள்; கதைத்தாள் செய்தி

தைக்குந்தாள் வதந்தித்தாள் திரைத்தாள் மஞ்சள் தேள்கொடுக்குத் துடுக்குத்தாள் சுடுந்தாள் தீத்தாள்

சேர்க்குந்தாள் காதலர்தாள் நிர்வா ணத்தாள் ஆள்களையே மிரட்டுந்தாள் அரசி யல்தாள்

அறிவுத்தாள் விளம்பரத்தாள் தேசி யத்தாள் கோள்குறித்துப் பலன்சொலுந்தாள் குடும்பத்தார்தாள். கோணலிலாக் கொள்கைத்தாள் இத்தாள் ஒன்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/23&oldid=692100" இலிருந்து மீள்விக்கப்பட்டது