பக்கம்:சுமைதாங்கி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிவி

'ஆட்டிவிட்டால் யாரொருவர் ஆடா தாரே?

அவனன்றி ஓரணுவும் ஆடா தென்பார். ஆட்டிவிட்டால் தஞ்சாவூர்ப் பொம்மை கூட

ஆடிவிழ மாட்டாமல் அமைத்துள் ளார்கள். காட்டிவிட்டால் மெய்ம்மைக்கு மதிப்புத் தாழும்;

கட்டிவிட்டால் அவிழ்ப்பதற்கும் ஒருவர் தேவை. ஈட்டி விட்டால் வேகமாகப் பாயும்; செல்வம்

ஈட்டிவிட்டால் செலவழிக்க மனம்வா ராது:

இருட்டிவிட்டால் கள்வர்க்கு நன்மை; செய்தி

எட்டிவிட்டால் காவலர்க்கு வசதி யாகும்! உருட்டிவிட்டால் பந்தாளுல் உருளும்; காற்றை

ஒட்டிவிட்டால் நசுங்கிப்போய் உருவம் தேயும்! சுருட்டிவிட்டால் தமக்குத்தான் சொந்த மென்று சொத்துரிமை பேசிடுவார் சுயக லத்தை வெருட்டிவிட்டால் சமதர்மம் தழைக்கு மென்பார்.

வெண்டிவிட்டால் குழம்புகன்ருய் மணக்கும், ஆமாம்!

ஊட்டிவிட்டுத் தாய்ப்பறவை வளர்க்கும் குஞ்சை

உண்டிவிட்டால் வளர்வானே மனிதன் நாளும்: மாட்டிவிட்டுக் கழற்றுவது சுலபமாகும்;

மாடிவிட்டுக் கீழிறங்க மனம்கேட் காது. வாட்டிவிட்டு மாமிசத்தைத் தின்ருன் ஒர்காள்.

வட்டிவிட்டு முதல்வாங்கார் கெட்டிப் பிள்ளை. நாட்டிவிட்டுக் கொடிபறக்க வைத்தான் சேரன்;

நாடிவிட்டுப் போயினரே வடவ மன்னர்!

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/24&oldid=692101" இலிருந்து மீள்விக்கப்பட்டது