பக்கம்:சுமைதாங்கி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடிவிட்டால் விதைப்பதற்கு மாத மில்லை.

அடிவிழாமல் படிப்பவனே நன்மா னக்கன்! பாடிவிட்டால் பரிசுதர மன்ன ரில்லை;

படிவிழாதா என்றேங்க வள்ளல் இல்லை! கூடிவிட்டால் காதலர்கள் இல்லறத்தார்;

குடிவிளங்கக் குழந்தைகுட்டி விளங்க வைப்பார்! ஒடிவிட்டால் தப்பித்தான்; அகப்பட் டோன் தான்

ஒட்டிவிட்டால் பிய்க்கவொண்ணுப் படம்போ லாவான்!

மழைவேண்டி விண்ணுேக்கி விண்ணப் பித்தார்;

மழைவேண்டி விமானத்தால் மருந்தும் விட்டார்! தழைவேண்டி விடியலிலே மரத்தில் ஏறித் -

தலைதட்டி விழுந்தவனே சிதறிச் செத்தான்! கழைவேண்டி விளையாடி விழிநீர் சிந்திக்

கடைகட்டி விசனி த்தான் வருவாய் @ುಖTir! குழைவேண்டி விதிர்விதிர்க்கக் காதைக் குத்திக் குண்டலங்கள் மாட்டிடுவார் குது.ாக லிக்க!

இட்டெலிவிசும்பிலேபோய்ப் பறக்கு மென்றல் என்பாட்டி விடமாட்டாள்; அடிவி டாதே! சட்டெனவே கிட்டிவிட வழியென்?' னென்பாள்!

சரியாக வானெலிக்குப் பேர்த்தி போல எட்டிவிடா ஒலிகளெல்லாம் வீட்டில் கேட்கும்

எளிதாம்ஒர் சாதனமாய் நிகழ்ச்சி எல்லாம் பெட்டியின்மேல் விழச்செய்யும் தொலைவுக் காட்சிப்

பெருநிலையம் பிறந்துளது தமிழகத்தில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/25&oldid=692102" இலிருந்து மீள்விக்கப்பட்டது