பக்கம்:சுமைதாங்கி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை காட்டி

தனிமரம்நான் தளிர்ப்பதில்லை; துளிர்ப்ப தில்லை;

தரைசாய்க்தி டாதபட்ட மரமா? அல்ல; மனிதர்கள் எனேகாடி வருவ துண்டு;

மருந்தான கருகொச்சி மரமா? இல்லை; கனிமரம்போல் ஏறெடுத்துப் பார்ப்ப துண்டு;

கட்சிகளின் கொடிமரமா? அதுவும் அல்ல; தனிமையிலே கின்றிடுவேன் சாலை தன்னில்; தந்திமர மா? விளக்கு மர்மா? இல்லை.

காற்றினிலே நிமிர்ந்திடுவேன் பாறை அல்ல;

கணேபோலத் தோன்றிடுவேன் பாய்வ தில்லை; நேற்றிருந்த படியேதான் இன்றும் உள்ளேன்;

நிலைகெட்டா அலைகின்றேன் உலகில் இல்லை! ஊற்றுகின்ற மழையெல்லாம் தலைமேல்; கோடை

உச்சிவெயில் அத்தனையும் உடலில் எந்த வேற்றுமையும் காட்டாத பட்டா ளத்து

வீரன்நான் துப்பாக்கி கையில் இல்லை.

அழகுமரம் சந்தனமா? இல்லை, மெல்ல

அலங்கோலம் அடைந்திடுவேன் காலப் போக்கில் கழுமரமா? அ துகதையில் தானே உண்டு:

கழுகுதொடா மரம்கான்; மின் மரமா? இல்லை. பழகுமரம், புதியவர்க்குப் பயன்ம ரம்கான்;

பழமரமா? ஆம், பழநாள் பழக்கம் உண்டு! நிழல்மரமா? நெடும்பனேபோல் நானும் ஒல்லி! -

கிம்மதியை நிறைத்திடுவேன்; இவைபோதாவோ?

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/28&oldid=692105" இலிருந்து மீள்விக்கப்பட்டது