பக்கம்:சுமைதாங்கி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையாகக் குகைகளிலே வாழ்ந்த நாளில்

ஏமாரு எச்சரிக்கை ஒருவா டிக்கை. செயற்கையாகச் சலுகையுடன் சிவிகை ஊர்ந்தார்

சீர்கெட்ட சங்கையில்ை சக்கை யானுர். வியர்க்கையிலே தென்றலெனக் கைகொடுத்து,

வேட்கையெழும் மிகையினேயே ஒழித்துக் காப்போம்.

உயர்கையிலே ஓய்வுவகை அறியார்; நங்கை

ஒளிக்கையில் கைபிணைத்தே படுக்கை சேர்வார் !

கைப்பிடித்தல் கடைசிவரை காப்பாற் றத்தான்;

கையாலா காத்தனத்தால் இடையில் போனுல்கைப்பிடித்தாள் கைம்பெண்ணே! அவளுக் கின்று கைதிநிலை போக்கிவிட்டோம்! ஆட்சிக் கட்டில் கைப்பற்றல் மக்களுக்கு வாழ்வு கல்க;

கைவிட்டே ஓடிடுதல் கோழைச் செய்கை! கைப்பான முருங்கைக்காய், சிகைக்காய் நன்கு

காப்பாற்றும் யாக்கைகலம், கைக்கொள் வீரே!

எதுகையுடன் மோனையென்பார் இலக்க ணத்தில்;

எதுகை, கால் எனப்புரியா தலைவார் இங்கே! மது, கையில்; மயங்குகையில்-குழறு கையில்

மனிதன்வாய் சீழ்க்கையொலி கிளப்பு கையில்இது கையின் முத்திரையென் றறைவார் கன்னம்

இருபுறமும் வீங்குகையில் முகைபோல் தோன்றும் பொது 'கை'யைப் புதுவகையில் சொல்லிப் பார்த்தேன்

புரிந்தவரை தமிழ்ககைக்குப் பெருமை, நன்றி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/33&oldid=692110" இலிருந்து மீள்விக்கப்பட்டது