பக்கம்:சுமைதாங்கி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗置圓°

பாவென்ருல் அகவற்பா கலிப்பா வெண்பா

பாராட்டும் வஞ்சிப்பா ஆக நான்காம். பாவென்ருல் மருட்பாவும் பாடல் என்பார்;

பாவினமாய்த் தாழிசையே துறைவி ருத்தம். பாவென்ருல் நெசவாளர் ஊடு பாவாம்;

பாந்தமுடன் பாட்டாளி பாத்யம் கொள்வான். 'பா'வென்ருல் சென்னையிலே வண்டிக் காரர்

பால்காரர்-கமையழைக்கும் பாச வார்த்தை!

பாக்கம்தான் கடற்கரையின் பாங்கர் ஊரே,

பாய்விரிக்கும் படகுகளைப் பார்த்தல் கூடும்! பாக்கியமாம் பாவையவள் பார்யாள் ஆல்ை;

பாட்டனுக்கும் பாட்டிக்கும் பாப்பா வேண்டும்! பாக்குவைத்தால் அழைப்பாகும்; பாங்கன் பாங்கி பாயசம்சேர் விருந்துக்குத் தயாராய் கிற்பார்! பாக்கிவைத்தால் வாழ்க்கையிலே நாண யம்பாழ்;

பாவியென ஒருபாட்டம் திட்டித் தீர்ப்பார்!

பாகலெனில் உண்மையைப்போல் கசப்பாம்; பாறை பாசிகொண்டால் நீரடியில் வழுக்கும் பான்மை! பாகனெனில் யானையோட்டி, பார்வ திக்குப்

பாதிதந்த பரமனுக்கும் பொருந்தும் பேர்தான்! பாகமெனில் பங்காளி கேட்கும் சொத்து

பாடகர்போல் இருகரமும் நீண்டால், பாகம்! பாகையெனில் வழுக்கையினே மறைக்கும் பாங்கு! பாணியெனல் பாசாங்கு; பாகுச் சொல்லே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/34&oldid=692111" இலிருந்து மீள்விக்கப்பட்டது