பக்கம்:சுமைதாங்கி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாயமிதைத் தீண்டாதே' எனமின் கம்பி அற்பாயுள் தடுப்பதற்குப் பாடங் கூறும்! அபாரமாகப் பாடசாலை போகும் பாலர்

ஆபாசப் படம்பார்க்கும் பாட்டை செல்வார்! உபாயமென்ன? பால்கல்வி கயிரு, பாம்பா?

உபாதையுள்ள உடற்பாண்டம் உதவாப் பானே! அபாண்டமாகப் பேசிடுவார் அகம்பா வத்தால்

அம்பாரம் பாதகம்சேர் சுபாவம் கொண்டார்!

"அப்பா'என் ருண்டவனின் பாதம் பாடும்

அம்பாளின் பாலகர்போல் பாசு ரங்கள்அப்பாலே தப்பான பான கங்கள்- -

அருள்பாலித் தாட்கொள்ள ஆர்ப்பாட் டங்கள்ஒப்பாரி-குறைகளெலாம் பார மாக்கி

ஒப்பாரே இல்லையெனல்-பாது கைகள் அப்பாவித் தனத்தாலே தலைமேல் வைத்தல்

அறிவங்கே பாடையேறும் பாம ரர்க்கே!

காப்பாற்றுங் கடப்பாடு மெய்ப்பா டாக்கக் கைப்பாடு படுகின்றேன்; பாலே யானுல் கூப்பாடு போட்டிடுவேன்! பாவா டைபோல்

கூம்பாத பாளைபோல்-விரியும் வாழ்வில் சாப்பாடு, சம்பாத்யம் குன்ரு வண்ணம்

சம்பாநெல் விளைச்சலுக்குப் பாசனம்போல்பாப்பாடும் கோட்பாடு வாய்ப்பா டாக்கிப்

பாய்ச்சுகிறேன்; பாதையில்ஏன் பாகு பாடு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/35&oldid=692112" இலிருந்து மீள்விக்கப்பட்டது