பக்கம்:சுமைதாங்கி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.

ஆமைபோல் புலனடக்கும் எளிமை வேண்டும். அகலாமை அணுகாமை தீயி டத்தில்! ஊமையிலும் உளறுவாயன் பதுமை, பொம்மை;

உதவாமை தோழமையின் தன்மை அன்று! தீமையிலாத் திருக்குறளின் தொன்மை போற்றல் செழுமையான தமிழ்வாழ இளமை எண்ணம்! சீமையெலாம் முதுமையான மொழிச்சான் ருேர்க்கே

சிலையெடுத்தல் தூய்மைமிகும் புதுமைக் கொள்கை!

கில்லாமை நிலையாமை உலகின் பன்மை,

நேர்மைதான் தமிழனது பழைமைப் பான்மை. கல்லாமை அகற்றுதல்கம் கடமை; பெண்டிர்

கைம்மைதனைக் களையாமை மடமை யாகும்! இல்லாமை இல்லாமல் பொதுமை யாக்க

இயலாமை மனிதனுக்கே கீழ்மை சேர்க்கும்! கொல்லாமை கள்ளாமை சூதா டாமை

குடியாமை பிறன்மனேகா டாமை பண்பாம்!

தையருமை டொங்கலாலும், பெண்க ளாலும்!

தாயம்மைச் சீர்மைசுவைச் சமைய லாலே!

கையுரிமை முடம்நீக்கும் நீர்மை வெல்லும்,

கனியினிமை காய்மரத்தின் திண்மை காட்டும்!

வையவரும் வாழ்த்தவரா காவின் கூர்மை

வையகத்தில் வெம்மைநிறை கொடுமை யாகும்! மையருமை உணராமை பேணு குற்றம்!

மை அரிதாம் அச்சகத்தில் விட்டேன் உம்மை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/41&oldid=692118" இலிருந்து மீள்விக்கப்பட்டது