பக்கம்:சுமைதாங்கி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசை

காலமெலாம் பின்னணியில் பாடி வந்த

கருநாகன் ஒருநாளில் உணர்வு பெற்ருன். ஒலமிடும் உள்ளத்துப் புயலின் சீற்றம்

ஒய்வில்லாக் கூச்சலாக உருவெ டுக்கச், சீலமுடன் பல்லாண்டாய் வருவாய் தந்த

திரைமறைவுப் பிழைப்புக்கு விடைய ளித்து, ஞாலமிசை இசைக்கலையில் ஈடில் லாத

ஞானத்தை வெளிக்காட்ட ஊக்கம் கொண்டான்!

முழுதாகச் சுருதி, லயம், சரளி, ராகம் -

முறைமையுடன் குருகுலத்தில் வசித்துக் கேட்டான். அழுதாலும் விட்டதில்லை; அறைந்த றைந்தே

அவன்தொடைகள் தாளமிட்டுக் காய்த்துப் போகும்! கெழுதகையாய்க் குரல்வளமும் செழித்தி ருக்கக்

கிருதி, வர்ணம், கீர்த்தனைகள், பாடல் கற்றுத் தொழுது, வாழ்த்துப் பெற்று, வெளி வந்த பின்பும்

துணிவில்லாச் சபைக்கோழை மறைந்தே வாழ்ந்தான்!

குரல், துத்தம், கைக்கிளையின் தொடர்ச்சி யாகக் கூடும்.உழை, இளி, விளரி, தாரம் என்ற நிரல்சுரங்கள் சரிகமப தாகியாம் ஏழும்

நிரவல்,சங் கதி,கார்வை, இறக்கம், ஏற்றம்முரல்கின்ற தம்புராவின் சுதியில் ஒன்றி, - முரணுமல் இழைந்தோடும் நாத வெள்ளம்! விரல்நுனியில் திரிபுடை,ரு பகமும், ஆதி

வின்னியாச லயமுடனே தாளம் மேவும்!

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/42&oldid=692119" இலிருந்து மீள்விக்கப்பட்டது