பக்கம்:சுமைதாங்கி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்

அகம்பாவம் மிக அசிங்கம், அக்கம் பக்கம்

அறிமுகம்செய்யும்அடக்கம் அநேகம் நன்மை! நகம்பெரிதா நாகரிகம்? அதிகம் நீண்டால்

கரகம்தான் எனில்தயக்கம் நடுக்கம் எல்லாம்! சுகம்பெறுதல் சொர்க்கம்போம் தொடக்கம் என்ருல்

சுணக்கம், தோல் சுருக்கம், கூன் வணக்கம் ஏனே? சகம்போற்றும் முச்சங்கம் வளர்ச துக்கம்

சண்பகம்போல் தமிழ்ச்சமூகம் மணம்கம் பிரம்:

ஆகம்தான் முழுத்தேகம்; அங்கம் கம்பம்;

ஆதிக்கம் தரும் ஆக்கம் வெறும் குதர்க்கம்! பாகம்தான் பூரணத்தின் பங்கம், இன்பப்

பானகம்தான் பாதகம்.ஆம் இனிப்பு நீர்க்கு காகம்போன் ருர்சிநேகம் துரோகம் வர்க்கம்! நாத்திகம்சேர் பிரசங்கம் பிரத்தியேகம் காகம்போல் ஒரக்கண் கலகம் துாண்டும்

காதகம்ஏன்? கானகம்தான் கலக்கம் நீக்கம்.

இகம்பரம் என் றிணக்கம்சேர் தரங்கம் பாடி

இச்சகம், பொய் இயக்கம், பின் இரக்கம் தேடும்! திகம்பரமாய்த் தெய்வீகம் சமணர் தீர்க்கம்,

தியக்கம் ஏன்? சேர்வதெனில் மேலாம் துங்கம்! மகம், பூரம், உத்திரமாம் மயக்கம் போக்கி

மத்தகம்போல் தலைதுாக்கின் களங்கம் ஒடும்! நுகம்பூண்ட இணைமாட்டின் நோக்கம் ஒன்றே;

நூக்கம்தான், தேக்குவேண்டாம் என்ப தேனே?

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/46&oldid=692123" இலிருந்து மீள்விக்கப்பட்டது