பக்கம்:சுமைதாங்கி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ਹੈ।

அச்சம், வீண் ஆயாசம், ஆசா பாசம்

அவகாசம் அப்பியாசம் வேண்டா அம்சம். உச்சம்போம் உபவாசம் உயிரை வாங்கும்

உத்தேசம், உபதேசம் உதவா உச்சம்! எச்சம்பின் ஏகதேசம் புகழே; என்றும்

இதிகாசம் இலவசம்தான்; இலட்சம் கோடி துச்சம், போ, எனவெறுக்கின் சுவாசம் சொச்சம்! சுபீட்சம்பின் அதிரசம்தான்; துன்பம் தும்சம்!

பஞ்சம்சேர் பிரதேசம் பரதே சம்போல்

பரிகாசம், பரவசம் வீண் பார பட்சம் வஞ்சம்கொள் அசம்பாவி தங்கள் தீர்ந்தால்! வம்சம்பார் பிரகாசம் புனர்பூ சம்போல்! மஞ்சம், பொய், மாமிசம், கள், மச்சம் சூதால்

மந்தகாசம் எத்தனைநாள் நிற்கும்? தொங்கும் குஞ்சம்போல் சிலகாலம் அழகு செய்யும்;

கொஞ்சம்தான் ஆயுள், பின் குறையாக் கூச்சம்!

நேசம்நீள் நிலைக்காவிட் டாலோ சேம்;

நெஞ்சம்சார்ந் தன்பிருந்தால் நிசம்செ ழிக்கும்! கேசம் முன் இருக்குமிடம் உதிர்ந்து வீழ்ந்தால்

கிலேசம்ஏன்? குப்பையாகும்; தலையா போகும்: பாசம்தான் அனிச்சம்; கல் அங்குசம், வெம் பாதரசம், இனிப்பூட்டும் பாய சம்.ஆம்! காசம்நோய் எலும்புருக்கின் கவசம் ஏது?

கலசம்போல் கணிசம்கொள் உயர்ந்த பூசம்!

39.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/48&oldid=692125" இலிருந்து மீள்விக்கப்பட்டது