பக்கம்:சுமைதாங்கி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

அலுவலில் சேர்க்கப்பட்டு, ஆனால், நாடு கடத்தப்பட்டேன் கேரளாவுக்கு!

23 ஆண்டுகள் உழைத்த பிறகு, முறையான ஒய்வு பெற 14 ஆண்டுகள் எஞ்சி இருந்த நிலையில், 1969-ஆம் ஆண்டில் பதவி விலகினேன். நானே வலிந்து இராசிநாமாச் செய்ததால், மத்திய அரசிலிருந்து பணிக்கொடையோ, ஓய்வூதியமோ எனக்குக் கிடை யாது!

உடனேயே, அதே மாதத்திலேயே, மாநில அரசுக்கு அழைக் கப்பட்டேன். தமிழ்நாட்டு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையில் பிரச்சார அலுவலராக நியமிக்கப்பெற்றேன். படிப் படியே உதவி இயக்குநர், துணை இயக்குநராகப் பதவி உயர்வுகளை முறையாகப் பெற்றேன். ஒய்வின்றித் திறமையாக நேர்மையாக உழைப்பவர் என்று பலராலும் போற்றப்பட்டேன். என்னைப் பாராட்டிப் புகழ்ந்து, மேலோர்கள் அளித்த நற்சான்றிதழ்கள் கைவசம் உள்ளன. அந்த ஏழாண்டுகளும் அரசு வட்டாரத்தில் கவிஞர் என்ற பெயரால் குறிக்கப்பட்ட ஒரே அதிகாரி நான்தான்!

இந்நிலையில், 1976-ஆம் ஆண்டில், இந்தியா நெருக்கடி நிலை யாலும், தமிழ்நாடு குடியரசுத்தலைவராலும் ஆளப்பட்டுவந்த நேரத்தில், நான் உதவி இயக்குநராகப் பதவி இறக்கம் செய்யப் பட்டுத், தமிழ்நாடு கதர்-கிராமத்தொழில் வாரியத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக 6 திங்கள் பணியாற்றினேன். திடீரென்று குலேத் திங்கள் 27-ஆம் நாள், மூன்று மாத முன்னறிவிப்புக்குப் பதிலாக 3 மாதச் சம்பளத்தைக் கையில் தந்து, கட்டாய ஓய்வு என்னும் அரசாணை ஒன்றையும் அளித்து, என்னே வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஓர் அரசு ஊழியர்க்கு இதைவிடப் பெரும் பேறு வாய்க்கப்பெறுமா? . -

எனக்குக் கட்டாய ஒய்வு தரப்பட்டது அநீதியானது; மாநில அரசின் விதி முறைகளின்படி, நான் ஒய்வுபெற 4 ஆண்டுகள் மீதம் இருக்கின்றன; மீண்டும் என்னைப் பணியில் துணை இயக்குநராக அமர்த்திட வேண்டும்-என ஆளுநர்கட்கும், ஆட்சியாளர்க்கும் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளேன். முடிவு???

எப்படியோ? நமக்குத் தொழில் கவிதை' அல்ல என்று நான் இதுவரையில் இருந்தாலும், இனி, எழுதித்தானே பிழைக்க வேண்டும்? - x .

ஆனந்தமாக எழுதத் துவங்கியவன் நான். நாற்பது ஆண்டு களாகக் கவிதை எழுதுகிறேன்; என்ருலும் முழுமையாக என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/5&oldid=692082" இலிருந்து மீள்விக்கப்பட்டது