பக்கம்:சுமைதாங்கி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்

பொங்கல்நாள் தமிழர்க்குத் திருநாள் என்ருல்

புழுங்கல்ஏன்? அழுகல்ஏன்? எதையோ பற்றித் தொங்கல்ஏன்? நுடங்கல்ஏன்? குறைம னத்தால்

சுருங்கல்ஏன்? அறுவடையால் மகிழ்ச்சி வெள்ளம் தங்கல்தான் உழவனிடம் விளங்கல் வேண்டும்!

தடைக்கல்லாய்த் தடுக்கல்ஏன்? அடிப்படைக்கல் செங்கல்லோ, கருங்கல்லோ, உறுதி யானுல்

செருகல்கள் அணுகல்தான் இயலா தென்றும்!

அகல்விளக்கை அமுக்கல்தான் அறிவுச் சூன்யம்;

அடக்கல்விண் தருக்கல்தாம் இருசா ரார்க்குள் இகல்முள வகைசெய்யும் முனகல் பேச்சால்

இயங்கல்தான் வழுக்கல்மேல் சருக்கல் போலாம்! நகல்என்றும் அசலாகா தன்ருே பொன்னில்

நசுங்கல்கள், நெருக்கல்கள், திருகல் என்னும்? புக்ல்என்ருல் சொல் எனலாம்; சுணங்கல் இன்றிப்

புகல்என்ருல் அடைக்கலம்.ஆம்; பொசுங்கல் இல்லை!

ஒக்கல்தாம் சுற்றத்தார்; ஒடுக்கல் நீங்கி

ஒடுங்கல்தான் குறள்நெறியில் ஒழுகல் ஆகும்! முக்கல்தான் நோய்க்குறியை விளக்கல் கூடும்;

மூச்சுமுட்டக் கக்கல்தான் நரகல் என்போம்! குக்கல்வந் தவற்றையெலாம் நக்கல் கன்ருே?

கொடுக்கல்தான் வள்ளலெனும் உயர்வின் ஓங்கல்! சுக்கல், தூள்; சிக்கல்நூல் நறுக்கல் நன்று!

சுருக்கல்தான் விண்பெருக்கல் சுமைகு றைக்கும்!

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/54&oldid=692131" இலிருந்து மீள்விக்கப்பட்டது