பக்கம்:சுமைதாங்கி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சல்

சல்லாபம் செய்திடலாம் வாராய் தோழி;

சலிப்புநீங்க உல்லாசம் தேவை இன்று! சல்லாவால் உடல்மறைக்க நினைக்கின் ருயே...

சரிதான முறைதான? இயலா தம்மா! சல்லகமாம் பன்றிமுள்போல் முடிசி லிர்த்துச்

சட்டென்று கோபித்துச் சண்டை போடச் சல்லடத்தைக் கட்டிவிட்டாய், தாங்க மாட்டேன்! சமாதான உடன்பாடு; சிரிப்புக் காட்டு!

சல்லிக்கட் டென்ருலே காளைக் கெல்லாம்

சங்கடந்தான் அடக்கவரும் காளை பர்க்கோ சல்லிக்கா சுக்காகப் பணயம் வைத்துச் - சபலத்தால் உயிர்விடுக்க மனம்வா ராது! சல்லடையின் கண்போல உடலைக் குத்திச் - சன்னலெனக் கொம்பாலே குடைச்சல் போட்டால் சல்லியத்துக் கரணியெனும் மருந்தை யிட்டுச்

சம்பூர்ண குணமடையச் செய்வார், அக்காள்!

சல்லரியென் ருல்மேளம், லயந்தப் பாமல் சங்கீத முழக்கமிடும் சமயம் பார்த்து! சல்லிகையோ பெரும்பறையாம்; உரசல் சப்தம்

சமர்க்களத்தில் ஒலிப்பதுபோல் ஓசை காட்டும்! சல்லியமென் ருல்ஈட்டி, சக்தி யுள்ளார்

சண்டப்ர சண்டமாக வீசிப் பாய்வார்! சல்லவட்டம் கேடயமாம்; தடுத்துக் கொண்டால் சஞ்சலமில் லாதுலகில் சஞ்சரிப்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/56&oldid=692133" இலிருந்து மீள்விக்கப்பட்டது