பக்கம்:சுமைதாங்கி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானம்

முக்கொடிகள் தருகிழலில் குளிர்ச்சி கண்ட பாவேந்தர் வறுமையிலே திளைக்கா வண்ணம்

பரிசிலாக வரையாது வழங்கி வந்த கோவேந்தர் பரம்பரையோ குன்றித் தேய்ந்து

குறுகிலத்துச் சிறுமன்னர் கிறைந்த தாலே காவேந்தர் நூலியற்றும் ஆர்வ மற்று

கலிந்தமனம் மெலிந்தவுடல் கொண்டு விட்டார்!

ஆலுைம் முத்தம்மாள் தமிழ்க்கு லத்தின்

அற்றைகாள் மூதாட்டி; கணவன் மாண்டு போனுலும் திடங்கெடாமல் ஒரேபு தல்வன்

போற்றிவளர்த் தாளாக்கிக் கல்வி தந்து தாகைக் கவிபுனையும் திறனைக் கண்டு

தானின்ற பொழுதினிலும் பெரிது வந்தாள். ஊணுக உயிராகத் தமிழை எண்ணும்

உயர்குடும்ப மனப்பாங்கு வேரு காதே!

இருந்திட்ட சிறுகாணி கன்செய் மண்ணில்

இருவருமே பாடுபட்டுச் செந்நெல் கண்டு, விருந்தினர்க்கும் சோறளித்துப், பண்பு காத்து,

விழாஎடுத்து, வீட்டிற்குப் பெண்ணும் கொண்டு, மருந்தனைய மருமகளால் மேலும் சீராய்

மகிழ்ந்திருந்தார்; இருபிள்ளை அளவாய்ப் பெற்ருர், பெருந்தனமாய் அக்குடும்பத் தலைவன் நாளும் பேணுகின்ற பாக்களெலாம் ஒலே யேறும்!

49 சு.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/58&oldid=692135" இலிருந்து மீள்விக்கப்பட்டது