பக்கம்:சுமைதாங்கி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்தநாளின் கள்ளிரவில் கள்வர் கூட்டம் அறிவிப்புத் தவருமல் திரண்டு வந்தார்!. 'கொடுத்துவிடு பொருள்யாவும்!” என மிரட்டக்

குறுங்கிழவி இங்கொன்றும் இல்லை' என்ருள். திடுத்திடெனப் பரண்மீதில் ஒருவன் ஏறித்

தேடுகையில் சுவடியோலைக் கற்றை கண்டு கடுத்தமுகத் தோடு, இதனைக் கொளுத்தி விட்டால்

காலவரை குளிர்விரட்டப் போதும்' என்ருன்.

"அப்பப்பா! அத்தனையும் மகன்வ ளர்த்த

அருந்தமிழாம்! அனைவர்க்கும் உயிராம்! இன்றேல், எப்போதோ உயிர்துறந்து மறைந்திருப்போம்

இன்னும்யாம் வாழ்ந்திருத்தல் இவற்ருல் மட்டும் ! இப்பாரும்.இவற்றைவிட உயர்ந்த தில்லை!

இப்போதே புறக்கடையில் புதைத்து வைத்த அப்பொன்னைத் தந்திடுவேன், அகல்விர்' என்ருள்;

அன்னேமொழி மானத்தைக் கிழவி காத்தாள்!

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/60&oldid=692137" இலிருந்து மீள்விக்கப்பட்டது