பக்கம்:சுமைதாங்கி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

6ులైు

சங்கராந்திப் பண்டிகையாய் முன்கா லத்தில் சரியாகப் பொருள்புரியா திருந்து வந்து, பொங்கலெனுந் திருநாளாய்ப் பிற்கா லத்தில்

புதுமையுடன் மாறியுள்ள விழாவைக் கண்டோம்! செங்கதிரின் ஒளியினையே இரவல் வாங்கித்

தேய்வதையும் வளர்வதையும் தொழிலாய்க் கொண்ட திங்களைப்போல் போலியல்ல; தனது சக்தி

தெளிவாக உடையதுதான் இந்நாள்; பொன்னுள்!

மாட்டோடும் ஆட்டோடும் வயற் பரப்பில்

மழைதண்ணிர் சேறென்று பாரா வண்ணம், வீட்டுக்கும் காட்டுக்கும் வேறு பாடு

விளங்காது, பகலன்றி இரவில் கூடப் பாட்டாளி பாடுபட்டுப் பயிர்வி அளத்துப்

பயன்முற்றும் அறுவடையாய்க் காணும்போதில்நாட்டுக்குப் பண்ணையாராய் யாரோ வந்து

கலன்களெல்லாம் களவாடல் முறையே ஆமோ?

உழைப்புக்கு வெற்றிபெறும் அரிய நாளில்...

உற்சாகப் பெருவெளியில் உழவன் நீந்திப், பிழைப்புக்குப் பட்டதுயர் மறந்து, கெஞ்சில்

பெருமகிழ்ச்சி கரைபுரள, மனைவி மக்கள் அழைப்புக்குச் சிறப்பளித்துக், குடும்பத் தோடும்

அண்டையுள்ளார் வளம்பேணி, வாழ்த்துக் கூறித் தழைப்பதுதான் தமிழ்நாட்டான் கண்ட பொங்கல்!

தைதை யெனக் கூத்தாடித் துள்ளு வோமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/61&oldid=692138" இலிருந்து மீள்விக்கப்பட்டது