பக்கம்:சுமைதாங்கி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

உதாரகுணம் வள்ளலாக்கும் சித்தாந் தந்தான்;

ஊதாரிப் பட்டத்தைப் பதாகை யாக்கும்! உதாரணமாய் ஊர்க்கென்று வாழ்ந்தால், தாசன்

ஒய்ந்தான கூத்தாடி?” என்றே கூறிஉதாசீனம் காதாரக் கேட்கப் பேசி

உடைத்திடுவார்; பிரதாபம் மத்தாப் பூவாம்! எதார்த்தவாதி வேதாந்தி, தாடி மீசை

ஏன்?’ என்று தாடையிலே தாளம் வைப்பார்!

ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி,

ஆரிறைத்தார்? தாமரையின் தண்டு, நீரில்; ஆதாரம் கேட்பாரா? தாழை, முள்ளாம்;

அந்திமந்தா ரையில்ஏது? மேதா விக்குச் சூதாட்டம் எதற்காக தாம்பில் தொங்கத்

தோதாகும்; சோதாவோ வாதாடல்தான்! சாதார ணக்குடிக்குச் சேதா ரங்கள்

சதாவந்தால் தாழ்வாகும் நிலைமை மேலும்!

தானத்தில் அன்னதானம் சொர்ண தானம்

தான்யதானம் கோதானம் பூமி தானம் தானத்தில் சந்தானம் அளவாய் வேண்டும்;

தாவரம்போல் தழைக்கவிடக் கூடா தென்பார்: தானத்தில் சமாதானம் உலகத் தேவை; -

சமத்தான உறவுக்கும் பிரதா னந்தான்! தானத்தில் நிதானந்தான் விதானம் போலே;

தாரகமும் அதேயாம்: போதும் இத்'தா'!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/63&oldid=692140" இலிருந்து மீள்விக்கப்பட்டது