பக்கம்:சுமைதாங்கி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6a6aᏗ

வையென்று சொல்லுமுன்னே வளையும் காக்கால் வைகிறவன் உயிர்வாங்கும் பகைவ வைான்! வையென்று சொன்னவுடன் பொருளைக் கீழே

வைக்கிறவன் உயிர்காக்கும் நண்ப வைான்! வையென்ருல் வைக்கோலாம்; மாடு தின்னும்!

வளர்பனியில் உறங்ககன்று வைக்கோல் கூரை! வையகத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டின்

வைப்புகிதி, சிலுவைஏசு கண்ட அன்பாம்!

அவையென்ருல் அஃதுக்குப் பன்மை என்பீர்;

ஆன்றேர்கள் குழுமுகின்ற சபையும் ஆகும்.

சுவையென்ருல் ஆறுவகை, எனக்கு மட்டும்!

தொல்காப்பி யன்சொல்லில் சுவையோ எட்டு: கவைக்குதவாச் செயல்புரிவோன் வீணன்; கெட்ட கயவனவன் நாட்டுக்குப் பிளவை போன்ருன்!

. ങ്ങഖ@lങ്ങരൂർ குற்றமாகும் தேங்காய் ஒட்டில்

நல்லவைகள் குடுவையாகும்; முகவை யாகும்!

தேவைக்கு மேல்சொத்துச் சேர்க்கும் தீயோன்

- திருடனெனச் சமுதாயம் உரைக்கும் இந்நாள்!

சேவைக்குக் கூலிகேட்போன் துரோகி யாவான்!

தெரிவையென்றும் அரிவையென்றும் புடைவை கட்டும்

பாவைக்குப் பணியாதோர் உலகில் இல்லை!

பார்க்கின்ருேம் கார்வையுடன் பாடும் பாட்டை!

கோவைக்குக் கோர்வையெனல் பிழையே ஆகும்;

கொல்லுகின்ருர் தமிழ்மொழியில் கலவை செய்தே!

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/64&oldid=692141" இலிருந்து மீள்விக்கப்பட்டது