பக்கம்:சுமைதாங்கி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

அவ்வையெனக் கிழவிக்குப் பெயரைச் சூட்டி

அவள்தந்த அறிவுரையைச் சலவை செய்வார்! செவ்வையாக எச்செயலும் ஆற்ற வேண்டும்;

தெளிவாகத் தெரியாமல் செல்லல் தீது! கொவ்வையெனப் பெண்ணிதழைக் குறிப்பிட் டாரே

கொட்டுகின்ற கசப்புமொழி கருதித் தானே? கவ்வையெனில் பழிதுாற்றல்; இதற்குச் சான்ருய்க்

கண்ணற்றேர் பொதுவாழ்வில் நிலுவை யானுர்!

பார்வையினல் மயங்கியோர்க்குத் தண்ட இனதான்

பளிச்சென்று திருமணத்தை முடித்து வைத்துப் போர்வையான இல்லறத்தில் புகவைக் கின்ருேம்!

போக்கேது, புத்திரர்கள் பெருகி விட்டால்? தீர்வைஅது தீராத தொல்லை தானே?

தெவிட்டுகின்ற அவ்வின்பம் மறப்ப தற்கு வேர்வைக்கு மதிப்பளிக்கும் உழைப்புத் தேவை!

வெறும்பேச்சா விதவைக்கு வாழ்வு நல்கும்?

பறவையினம் குலவையிட்டுப் பாடி, வானில்

பறக்கலாகும்; குரவைக்கூத் தாடும் மேலே! மரவையிலே பொருள்வைப்போம்! இரும னம்சேர்

வதுவையெனில் பூவையுடன் அரைவை யாகும்! குருவையினம் நெல்வகையில் வேளாளர்க்குக்

கொடுத்துவைத்த வைரமணி, மிதவையன்று! அறுவையெனில் ஆடையாகும்; விலக்க மாட்டோம்!

அறுவையெனில் இந்நாளில் பொருள்வே றன்ருே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/65&oldid=692142" இலிருந்து மீள்விக்கப்பட்டது