பக்கம்:சுமைதாங்கி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8

வாசகத்தில் சிவாயநம மந்தி ரந்தான்

மாணிக்க வாசகர்சொல் ஐந்தெ ழுத்து! வாசமெனில் வாழ்இடமாம்; உபவா சத்தால்

வாடும்உடல் அபவாதம் வானே முட்டும்! வாசலது திறந்திருந்தால் நுழையும் மார்க்கம்;

வாங்கி, விடும் மூச்சுக்கு மூக்கு வாசல்! வாசனைதான் நறுமணமாம்; சகவா சத்தால், மாருத சவ்வாதும் சாணம் ஆகும்!

வாரமெனில் ஏழுநாட்கள்; உழுத கெல்லே

வாரிடுவார் நிலப்பூமான்; அதன்பேர் வாரம்!

'வாரணமென் ருல் தமிழில் யானை, பன்றி,

வாத்து, கோழி, தடை, மறைப்பு. கவசம்-என்பார்! வாரியெலாம் அணை, தேக்கம், துறைகள் தோறும்

வாரியங்கள் அமைத்துநலம் விளேத்தோம் அன்று! வாரணியும் மடவார்போல் கூந்த லோடு,

வாலுள்ள தேவாங்காய் இளைஞர் ஆனர்

வாலையிளங் குமரியரும் வாட்ட மின்றி

வாலிபரின் உடையணிந்து கவாத்துச் செய்வார்! வாழையடிவாழையென வாரா திந்த

வார்ப்படத்து நாகரிகம் துவாரம் உள்ள வாளியிலா நீர்தங்கும்: எரியும் காள -

வாயின் கீழ் வாயிலிட்டால் சுவாகா எல்லாம்! வாளுருவும் வீரனுக்குக் கேட யத்தை

வைத்திருக்கும் வகைதெரியும், வாவா வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/67&oldid=692144" இலிருந்து மீள்விக்கப்பட்டது