பக்கம்:சுமைதாங்கி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

铲让

இந்த நூலுக்கு நீங்கள் தரும் உற்சாகம் ஆதரவு ஊக்கம் இவைகளைப் பொறுத்து, நான் அடுத்தடுத்துச் சில நூல்களை வெளியிட எண்ணுகின்றேன். கவிதைத் தொகுப்பு மட்டுமின்றிச் சில உரைநடைப் புத்தகங்களும் எழுத நினைக்கிறேன். இன்றைய வரலாற்று நிகழ்ச்சிகள் சில நேற்றையச்செய்திகளாக உருவெடுக்கு முன்னர், அந்தக் கருவின் சினேயில் சிறியதொரு அணுவாக நானும் இருந்திருக்கிறேன் அல்லவா? நான் நேரில் பங்கேற்று அறிந்துள்ள சரித்திரச் சம்பவங்களை எப்போதாவது உங்களுக்கு நானே தெரி வித்திட வேண்டாமா? வேண்டுமெனில், அவற்றை யெல்லாம் உரைத்திடும் வாய்ப்பு, இப்போதன்றி வேறெப்போது நேரும்?

w மிகுந்த இன்னலுக்கும் முட்டுப்பாட்டிற்கும் இடையே இந் நூலை வெளிக்கொணர்ந்துள்ளேன். தயங்கித் தயங்கி, ஒராண் டாய்த் துணிவு வராமல், பின்னடைந்தேன். மூவேந்தர் அச்சகம் முத்து, ஒத்துழைக்க முன் வந்தார். உடுக்கை இழந்தவன் கை போல உதவினர். இருள் சூழ்ந்த போதில் ஒளி வழங்கினர். அவருக்கு நன்றி. பல்சுவை ஒவிய நிபுணர் அருமை நண்பர் கோபுலு அவர்களும் நன்றிக்குரியார், முகப்பு ஓவியம் அவர் @)と。 வண்ணத்தில் முகிழ்த்தது! -

இனி, என் உடல் பொருள் உயிரானவர் என்னைப் பாராட்டிச் சிலாசாசனம் போல் வடித்துள்ள சொற்களிற் சில, அட்டையின் பின்புறம் இடம்பெற்று நூலுக்கு மெருகேற்றுகின்றன.

கையேந்தி இந்நூலை வரவேற்றுத் தமிழுலகம் எனக்குக் கைகொடுக்கும் என்று நம்பிக் கைகுவித்து வணங்குகிறேன்.

ஈன்று புறந்தந்த என்தாய் சோதிக்கும் சான் ருேராம் தந்தை சுந்தர மூர்த்திக்கும் ஆன்றவிந் தடங்கிய அன்பின் அணிகலய்ைத் தோன்றிய இச்செய்யுள் தொகுப்புநூல் வழங்கினனே.

அன்பன் சு. கருளுனந்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/7&oldid=692084" இலிருந்து மீள்விக்கப்பட்டது