பக்கம்:சுமைதாங்கி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தன்மை

வள்ளியம்மை வளமான மண்ணில் ஊன்றி

வகையாக வளர்த்துவரும் கிழங்கு போலக் கள்ளமின்றி காடோறும் மெல்ல மெல்லக் -

காண்பவரின் கருத்தினையே கவரும் வண்ணம் புள்ளிமயில் சாயலுடன் உயர்ந்து வந்தாள்! -

பொன்னூரின் மாணவர்கள் குறும்புப் பார்வை பள்ளிக்குச் செல்வதையே தடுக்க நேர்ந்து,

பாவையவள் வீட்டோடு முடங்கிப் போனுள்!

கலைபயிலுங் காலத்தை வீண் டித்துக்

கலவரத்தை நாடுகின்ற உள்ளப் பாங்கும், தலைமுடியும் கன்னத்தில் நீண்ட துரனும்

தடையின்றி வளர்ப்பதிலே விருப்புங் கொண்டு நிலைகுலையும் சிலர்மட்டும் அலுவல் இன்றி,

கிமிர்உடலில் இறுக்கமான ஆடை பூண்டு சிலையனேயாள் சிறையிருக்கும் வீட்டின் முன்பு

தினந்தோறும் நடைபயிலும் வழக்கம் ஏற்ருர்!

யாரையுமே ஏறெடுத்துப் பார்க்க வில்லை!

ஏழையான் முத்தப்பன் இளைஞன், உள்ளுர், கூரையிட்ட வீட்டினிலே குடியிருக்கும்

குணக்குன்று; மருந்தகத்தில் நோயா ளர்க்கு நீரையிட்டுத் தந்தாலும் நீங்கு மென்று

நீடியநற் புகழ்பெற்றேன்; எளியன்; தூயோன்; பேரையெவர் கேட்டாலும் பெருமை கொள்வார்;

பேதையவள் நெஞ்சத்தில் இடத்தைப் பெற்றன்.

65.

சு.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/74&oldid=692151" இலிருந்து மீள்விக்கப்பட்டது