பக்கம்:சுமைதாங்கி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குரைஞர் கண்பரிடம் அடுத்துச் சென்று

வாட்டத்தைத் தெரிவித்தேன்! கேட்டுக் கொண்டே வழக்கமான சோம்பேறித் தனத்தால் ஏதோ

மனுவொன்றைத் தட்டச்சு செய்து தந்து முழக்கமிட்டார்: காவலர்கள் நிலையத் துக்குள்

முறைப்பாக நீ நுழைந்து, கொடுத்தால் போதும். உழக்களவும் துன்பமின்றி ஒடிப் போகும்;

உடனே செல்' எனத் துரத்திக் கடன்மு டித்தார்.

‘போய்வருவேன்' என்றுரைத்துப் புறப்பட் டேன்கான்; புகைச்சுருட்டைப் பற்றவைத்துத் தலைய சைத்தார். ஆய்வாளர் அலுவலகம்' எனுஞ்சி வப்பில்

அறிவிப்புப் பலகையின்கீழ் நுழைந்தேன் உள்ளே! ஒய்வில்லாத் தொலைபேசிக் கூப்பாட் டுக்கும்

உயர்ந்திருந்த கோப்புகட்கும் ஊடே கின்ருர். காய்வாரோ?’ என்றஞ்சி வணக்கம்' என்றேன்;

கனிவாகக் கைகாட்ட, அமர்ந்து கொண்டேன்!

விண்ணப்பம் எடுத்தளித்தேன்; விவரம் கேட்டார்;

விரட்டுகின்ற கடிதங்கள் வரத்தொடங்கிக் கண்ணயர முடியாத கவலை சூழக்

கண்த்துக்குக் கணம்சாகும் கிலேமை சொன்னேன். 'திண்ணமாகத் தண்டிப்பேன்!” என்று கூறித்

திறந்துபார்த்தார் கடிதவுரை!...சீறி வீழ்ந்தார்: "மண்ணுஉம் தலைக்குள்ளே: இதாமி ரட்டல்? -

வருமான வரிபாக்கி எச்ச ரிக்கை'

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/81&oldid=692158" இலிருந்து மீள்விக்கப்பட்டது