பக்கம்:சுமைதாங்கி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1, 3, 5, 7 -

உற்சாகம் கொப்புளிக்க ஓடி வந்தான்' -

ஒன்றுக்கும் உதவாத கண்ணே யன்தான்:"நற்சான்றுக் கடிதமொன்று தருவீர், அய்யா!

நானதனைப் பயன்படுத்தி வேலை தேடித் தற்சமயம் பிழைத்திடுவேன்; தருணம் இன்று

சரியாக வாய்த்துளதே! உங்கள் நண்பர் சிற்சபையின் உதவியாளாய் அமர்ந்து விட்டால்...

செல்வாக்குப் பெற்றிடுவேன்!” என்வே கெஞ்சித்

தன்னிடமே கடிதத்தை வரைந்து, கையில்

தரவேண்டும் என்றுபிடி வாதம் செய்தான். என்னிடமா அவன்யுக்தி எழுத்தில் சூழ்ச்சி

இணைத்திட்டுப் புகழ்ச்சிபோல எழுதித் தந்தேன்! பொன்னெனவே அதைப்போற்றிப் புறப்பட்டான்; நான் புதுமுறையைத் தொலைபேசி வழியே சொன்னேன் ஒன்றுமூன்றைந் தேழென்ற வரிகள் சேர்த்தால்

உண்மையெண்ணம் புரிந்திடலாம் படித்துப்பாரும்:

கண்ணையன் நல்லவனே அல்ல; என்று கபோதிகூட மனமாரக் கூற மாட்டான்! கண்ணியத்தின் இருப்பிடமாய் எவன் சொன் லுைம்

கட்டாயம் மெய்யாக இருக்கும். மாறு திண்ணமாக கம்பவேண்டாம் திருடன், சூதன்,

திடுக்கென்று கழுத்தறுப்போன், நெஞ்சில் தோன்றும் எண்ணத்தை மறைக்கின்ற எத்தன், பித்தன்

இப்படியும் வேண்டாதார் விளம்பு வார்கள்!

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/86&oldid=692163" இலிருந்து மீள்விக்கப்பட்டது