பக்கம்:சுமைதாங்கி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8

கூப்பிட்ட குரலுக்கு வரவே மாட்டான்;

கொடுத்திட்ட வேலைகளை முடித்தி டாமல்! சாப்பாடுந் தூக்கமுந்தான் இலட்சியங்கள்

தனக்கல்ல; தன்னலத்தைப் பேணு வார்க்கு! 'ஏய்ப்பதல்ை தவறல்ல; ஏமா றும்பேர்

இருக்குமட்டும் நல்லதுதான்; இலையேல் நம்மைக் காப்பாற்றிக் கரைசேர்க்க மாட்டார் என்பான்

கடமையிலே கருத்துள்ள கர்ம வீரன் (!)

அகப்பட்டதைச் சுருட்டும் ஆண்டிச் சாமி

அஞ்சிடுவான் இவன்பெயரை உச்ச ரித்தால்! சகப்புரட்டன் கன்னக்கோல் பொன்னுச் சாமி சரியான எதிரியென இவனைக் கொண்டான்! தகப்பனையே யார்என்னும் சிகப்புச் சாமி

தலைப்பாகை மாற்றுதற்குத் தடைஇ வன்தான்! மிகப்பெரிய போக்கிலிகள் தொகுப்புக் கூட்டம்

மிரண்டோடி ஒளிவார்கள் நேரில் கண்டால்!

கும்பிட்டுக் கழுத்தறுக்க விரும்பும் செய்கை கோணலான குறுக்குவழி தேட மாட்டான்!

வம்புக்குத் தாம்பூலம் வாங்கும் நேர்மை

வல்லடியும் சொல்லடியும் பொல்லாங் கென்பான்! தம்பிக்கும் அண்ணனுக்கும் பகைமை மூட்டல்

தறுதல்ைகள் போக்கென்று வெறுப்புக் கொள்வான் கம்பிக்கை மோசடியே அன்புக் கொள்கை

நன்றிகொல்லும் நாகரிகம் ஒன்றும் இல்ல்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/87&oldid=692164" இலிருந்து மீள்விக்கப்பட்டது