பக்கம்:சுமைதாங்கி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடை

பொய்யாகும் வாழ்வென்று புகல்வார் தம்மைப்

பொய்யராக்கி, ஏமாற்று புரிவோ ராக்கி மெய்யாகும் இவ்வுலக வாழ்வே என்று

மெய்ப்பிக்க, உடலுக்கு மெய்யென் றும்பேர் கொய்யாத கனியான தமிழின் சான்ருேர்

கூடிஅக்காள் சூட்டினரே! அக்கா லத்தே செய்யாத அறிவார்ந்த பணியும் உண்டோ?

சிந்தித்து விடைகாணுத் தோல்வி யுண்டோ!

கையாலே பருத்தியிலே பஞ்செடுத்துக்

கையாலே நூல் நூற்றுத் தறிய மைத்துக் கையாலே கெய்கின்ற தொழிலை முன்னர்

கண்டுபிடித்து உயர்வான முறையில் அந்நாள் கையாளும் பெருமைசேர் தமிழர் கூட்டம்

கடல்கடந்து வாணிபத்திற் காகச் சென்று பையாலே பொருள்நிறைத்து மீண்டார்; அந்தப்

பழம்புகழை எண்ணிடிலோ ஏக்கந் தோன்றும்!

அயல்நாட்டார் தமிழகத்தின் மென்மை மிக்க

அழகுமிழும் பட்டாடை, பருத்தி யாடை மயல்பொங்கத் தம்மேனி தழுவு தற்கு

மரக்கலத்தை எதிர்பார்த்துக் காத்தி ருந்தார்! கயல்விழியார் எல்லாரும் விழையும் வண்ணம்

கைவண்ணம் காட்டிவந்தார் கமது கெய்வோர்! முயல்வதிலே பிழையில்லை; ஆனல் இந்நாள்

முடங்கிவிட்ட கொடியநிலை கண்டோம் அந்தோ!

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/92&oldid=692169" இலிருந்து மீள்விக்கப்பட்டது