பக்கம்:சுமைதாங்கி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

துன்பத்தை வெல்வதற்கோ துஞ்சு கின்ருர்

து.ாயமனச் சந்தனத்துப் பேழைக் குள்ளே? என்றுமுள தென்தமிழை இயம்பி மிக்க

இசைகொண்ட தமிழ்க்கம்பன் அருகே நின்று தன்கரத்தே எழுத்தாணி ஏடு தாங்கிச்

சலியாமல் நாளெல்லாம் எழுது கின்ருன்; மன்பதைக்கு கம்அண்ணு வழங்கும் செய்தி

மகிழ்வுடனே கேட்டெழுதி கிற்கின் ருனே?

சிலநாள் பின், சதுக்கத்தின் மறுபுறத்தில் சிலைவடிவு கொண்டுள்ள சிலம்பு தந்த உலகமகா காடகநூல் ஆசான் ஆன

ஒப்பற்ற தமிழ்த்துறவி இளங்கோ வந்து கலமாக எழுதுதற்குத் துவக்கம் செய்தான்.

நாடுபோற்றும் வள்ளுவர்க்குக் கோட்டங் கண்ட பலமான ஆட்சியதன் பெற்றி பாடும்

பகுத்தறிவுப் பெரியார்போல் எழுது வானே?

வெல்திறல்கள் பலபடைத்த கடலாம் அண்ணு

விழிமூடித் துயில்கொள்ள, எதிரில் ஆங்கே பல்கலைகள் பயிற்றுகின்ற கழகம் நாளும்

பணிவுடனே நிற்பதும்ஏன்? அண்ணன் கற்ற பல்கலையும் பாங்குடனே முயன்று தானும்

பைந்தமிழர் அனைவர்க்கும் கற்பிக் கின்ற நல்லதொரு பெருநோக்கம் கொண்டோ? அன் றி

நாமெங்கே இந்நாளில் எனகி அனத்தோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/95&oldid=692172" இலிருந்து மீள்விக்கப்பட்டது