பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் கோணங்கி ஊருக்குமேல் வெம்பரப்பான அபாந்திரம். தெற்கில் சரிந்து கிடக்கும் நட்சத்திரங்கள். சரிந்த நட்சத்திரங்களைப் பார்த்து வருகிறார் கள் ஒவ்வொரு காலமும். நம்ம காடுகளைக் கடந்து போகும் பூமத்திய ரேகை விளிம்புகளில் நம்மூர் சமுசாரி இன்னும் மேழிபுடித்து உழுதுகொண்டிருக்கிறான். மண்ணை வகுந்து கொண்டுபோன கொழு எரிகிறது. மானம் பார்த்த ஆன்மாதகிக்கிறது. உழவு மாடுகள் மூக்கந்தண்டு வலிக்க வெக்கை யைக் குடிக்கின்றன. பூமத்திய ரேகைக் காடுகளில் வகை வகையான மண்வாசிகள். கருப்பு, கக்கரை, எரிசெவல்கள், தேரிகள்; போடுமண்கள் மேவி மேவி நிறங்கள் பகிர்ந்து குணங்கள் புதுசாகி புது மண்ணுக்ளை அம்மை ஈனுகிறாள். இங்கு தண்ணிக்குத் தண்ணி பிணக்கு. தனித் தனி குணங்களில் தண்ணி சீறும். நூறு நூறு குணங்கள். காடை, வரிக்குயில் ஆக்காண்டி, கருங்குருவி, முயல் தட்டும் வல்லயத்தான் பட்சிகள்; எப்பேர்ப்பட்டதையும் ஒரே அடியில் விழுத்தாட்டும். வெக்கையை வாங்கி வாங்கி மண்ணுக்கு வீரியம் கூடுது. பஞ்சம் வந்தாலும் தோத்துப் போக மாட்டான் சமுசாரி. மண்ணு கொடுத்த வைராக்கி யம் அவனுக்கு. எதுக்கும் பணிய மாட்டான். கம்மஞ்சோறு தின்ன கொழுப்பு இன்னும் விடவில்லை. போர்க்காளை மாதிரி கொம்பு களை ஆட்டி ஆட்டிப் போகிறான். முட்டி விடுறது மாதிரி பாய்ச்சல் போடும் காளைகள். குருமலை சமுசாரி தெருவில் நடக்கும் போது எத்தினை திருக்கு முருக்கு....