பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இக்கொள்கையை மாநகர்க் @gmairana' (The religious Intoxication of great cities) என்று திறனாய்வாளர் குறிப்பிடுகின்றனர். மேலை நாட்டுக் கலை இலக்கியப் போக்கை அடியோடு மாற்றியமைத்த ஆற்றல்மிக்க இயக்கங்களான சர்ரியலிசம், சிம்பாலிசம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணே போதலேர்தான் என்பது எல்லாரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அவருடைய கவிதை நூலான நச்சுப் பூக்கள் (Les Fleurs du Mal) 1857ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதில் தெய்வ நிந்தனை காணப்படுகிறது என்று கூறிச் சமயவாதிகள் கண்டனக் குரல் எழுப்பினர். படிப்பவர் உள்ளத்தில் கீழ்த்தரமான உணர்ச்சிகளை அவர் கவிதைகள் தூண்டுவதாகக் குற்றம் சாட்டி, பிரெஞ்சு அரசாங்கம் 300 பிராங்க் அவருக்கு அபராதம் விதித்தது. தனக்குப்பின் வந்த சந்ததியினரிடையே நச்சப்பூக்களைப்போல் அபரிமிதமான செல்வாக்குப் பெற்ற வேறு கவிதை நூல் மேலை நாட்டில் எதுவுமில்லை என்று சொல்லலாம். மேலைநாட்டில் கவிதைப் புதுமையே (Modernism in poetry) இந்நூலில் இருந்துதான் தொடங்குகிறது. புதுக் கவிஞர்களின் முன்மாதிரியே (Archetype) போதலேர்தான். புதுக்கவிஞர்களின் பண்புகளாக வரையறுக்கப்பட்ட தனிமை, எதிர்ப்புணர்ச்சி, மனச் சஞ்சலம், தன்னையே அழித்துக் கொள்ளும் ஆத்திர உணர்ச்சி யாவும் போதலேரிடமிருந்து பெற்றவையே. பிறர் தூற்றும்படி புரட்சிகரமாக வாழ்ந்த போதலேருடைய வாழ்க்கை vîsir eylą šGólůų Lippu augavmĠp (History of foot notes) புதுக்கவிதையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய வரலாறாகும் என்று மேலை நாட்டுத் திறனாய்வாளர் குறிப்பிடுவது பொருத்தமே. 'கற்பனை என்பது அறிவியல் அடிப்படையில் அமைந்த பேராற்றல். பேரண்டத்தின் ஒழுங்கையும், இயக்கத்தையும் (Univer sal Analogy) கற்பனை ஆற்றலால் தான் உணர முடியும் என்று போதலேர் குறிப்பிட்டார். ஸ்வீடன் பர்க்கும், ஆலன்போவும் இதே கொள்கையுடையவர்கள். போதலேர் ஒர் ஐயுறவாளர் (Sceptic), கற்பனை ஒரு பேராற்றல் என்று குறிப்பிட்டாலும், அது கை கொடுத்து உதவாத சில நேரங்களில் அதன்மீது அவருக்கு ஐயுறவு ஏற்பட்டது. அந்த நேரங்களில் கற்பனைக்கு ஊக்கம் கொடுப்பதற்காக மதுவையும் 99