பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


) கஞ்சாவையும் நாடினார். அவற்றின் தூண்டுதலால் ஒரு செயற்கைச் சொர்க்கத்தை அவரே படைத்துக் கொண்டு அதில் திளைத்தார். போதலேர் கடவுட்பற்றோ, மதப்பற்றோ இல்லாதவர். என்றாலும் அவர் உள்ளத்தில் படிந்துவிட்ட சமயக் கருத்துக்கள் சிலவற்றை அவரால் அடியோடு உதறமுடியவில்லை. கிறித்தவ சமயக் கொள்கைப்படி, மனிதன் பாவியாகவே இருக்கிறான் என்ற உணர்வும், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்குமுன் வாழ்ந்த ஏதேன் என்ற சொர்க்கத்தை மனிதன் மீண்டும் அடைய முடியாது என்ற உணர்வும், இவ்வுலகின் துன்பமாகிய கோரப்பிடியிலிருந்து விடுபடமுடியாது என்ற உணர்வும் போதலேரை ஆட்டிப் படைக்கின்றன. இத்துன்ப உலகின் பிடியிலிருந்து விடுபட்டுத் தன் ஆன்மாவைப் பரவசப்படுத்துவதற்காக, அவரே படைத்துக் கொண்டதுதான் செயற்கைச் சொர்க்கம்...!" போதலேரின் நச்சுப் பூக்கள், மூன்று கொத்தாக மலர்ந்திருக் கின்றன. முதல் கொத்து அவர் உளச் சோர்வையும், இரண்டாவது கொத்து பாரிஸ் நகரக் காட்சிகளையும், மூன்றாவது கொத்து செயற்கைச் சொர்க்கத்தை நோக்கிய அவர் பயணத்தையும் விவரிக்கின்றன. இளமையில் கட்டுப்பாடின்றி வாழ்ந்த தம் இழிந்த வாழ்க்கையைப் பல பாடல்களில் அவர் திரும்பிப் பார்த்து உளச் சோர்வு கொள்கிறார். தம்மை வாட்டும் உளச் சோர்வில் அழுந்திப் போவதா அல்லது செயற்கைச் சொர்க்கத்தில் பறப்பதா என்ற ஊசலாட்டம் பலபாடல்களில் கற்பனை நயத்தோடு எடுத்துரைக்கப் படுகின்றது. பல பாடல்களில் செயற்கைச் சொர்க்கத்தில் அவர் அடையும் பரவச நிலை பேசப்படுகிறது. பெண்ணால் பெறும் ஐம்புலன் இன்பத்தைக் கற்பனை செய்யாமல், ஒலி, ஒளி, மணம் இவற்றால் பெறும் இன்பங்களையே கற்பனை செய்கிறார் போதலேர். அவருடைய சொர்க்கத்தில் வரும் அடிமைகளும் ஏவலர்களும் நிர்வாணமாகக் காட்சி தருகின்றனர். அவர்களுடைய நிர்வாணம், இவ்வுலக நாகரிகத்தின் தீக்கரங்களால் தீண்டப்படாத தூய்மையின் உருவகம். - செயற்கைச் சொர்க்கத்தில் போதலேர் அடிக்கடி திளைத்துப் பரவசப்பட்டாலும், சாவைப்பற்றிய எண்ணம் அவர் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை. நச்சுப்பூக்களில் இறுதியில் உள்ள பயணம் என்ற பாட்டில் தாம் கடலின் அலைவயிற்றில் ஆழ்ந்துவிட விருப்பம் தெரிவிக்கிறார். தாம் சென்றடைய விரும்பும் குறிக்கோள் 100