பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கதைப் பாடல்களும் துன்பியலும் அ. மார்க்ஸ் கட்டபொம்மு கதை, கான்சாகிபு சண்டை, ஐவர்ராசாக்கள் கதை, பூலுத்தேவன் சிந்து, சிவகங்கைக் கும்மி, தேசிங்கு ராசன் கதை, முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை போன்ற நாட்டார் கதைப் பாடல்கள் அனைத்தும் துன்பியல் இலக்கியங்களாகவே அமைந்துள்ளன. பிற பாரம்பரிய மிக்க மொழிகளுடன் ஒப்பிடும் போது துன்பியல் இலக்கியங்கள் குறைவாக உள்ள தமிழில் இந்நாட்டார் இலக்கியங்கள் யாவும் துன்பியல் வகைப்பட்டதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. துன்பியலுக்கும் கதைப் பாடலுக்குமிடையே யான தொடர்பையும் துன்பியல் நாயகன் (tragic hero) பற்றிய நாட்டார் கண்ணோட்டத்தையும் புரிந்து கொள்வது நாட்டார் உளவியலை ஆய்வு செய்பவர்களுக்கு அவசியமாகும். ஐரோப்பியத் துன்பியல் இலக்கியப் பாரம்பரியத்தை ஆராய்ந்த வர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் எழுந்த துன்பியல் இலக்கியங்களும் வெவ்வேறு வகையான துன்பியல் பற்றிய கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதையும், வெவ்வேறு கருத்து såso avāşll(\LD Tasić3Gö (Ideological structure) @List(5%gjih தன்மையுடையதாக உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளனர் (Aumer is, Foundations of Marxist Aesthetics, Moscow, 1977). Lugraml uu கிரேக்கத் துன்பியல் இலக்கியங்களின் முக்கிய காரணியாக விதியும், தவ செவ்வியல் (Neo classical) துன்பியல் இலக்கியங்களில் காதல்-கடமை போன்றவற்றின் மோதல்கள் மைய பிரச்சினை யாகவும், அற்புதரசனைத் துன்பியல் இலக்கியங்களில் உன்னதக் குறிக்கோள்களுக்கும் அடிப்படை எதார்த்தங்களுக்குமிடையே யான இடைவெளிகளே ஆதாரப் பிரச்சினையாகவும் அமைந்தது எனவும் கூறுவர். - I06.