பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனாலும் இது ஸ்தூலமான தனிமனித நடவடிக்கைகளின் மூலமாகவே வெளிப்படுகின்றது. நிலவும் அமைப்பிற்கெதிராகவே ஒரு துன்பியல் நாயகன் தோன்றுகிறான். அவன் தனது நடவடிக்கை யின் வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தை உணராது போனாலும், தனது சொந்த நலன்களையே முன்னெடுத்துச் செல்வதாகத் தோன்றி னாலும் அவனது நடவடிக்கையின் புறவயமான வரலாற்று முக்கியத் துவமே அவனின் அக வயமான விருப்புடன் இணைகிறது. அதனா லேயே அவன் மக்கள் மத்தியில் இடம் பெற்றவனாகிறான்; நிலைத்து நிற்கிறான். அவனது கதை இலக்கியமாக்கப் படும்போது அது குறிப்பிடத்தக்க துன்பியற் படைப்பாக இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகின்றது. மாறாக எல்லா மரணங்களும், சோகங்களும் துன்பியல் இலக்கியங்களாக மாறுவதில்லை; மக்கள் மனத்தில் ஊடுருவி இடம் பெறுவதில்லை. வரலாற்று முக்கியத்துவத்துடன் இணையாத மரணங்கள், தியாகங்கள் முதலியவை துப்பறியும் கதைகளில் நிகழ்த்தப்படும் கொலைகளைப் போல வெறும் பய உணர்ச்சியை ஊட்டுவதற்கு வேண்டுமானால் பயன்படுமேயொழிய மனித மனத்தின் வேர்களை ஊடுருவப் பயன்படா. நவீன தமிழ் நாவல்கள், தமிழ் சினிமாக்கள் ஆகியவற்றை மனத்தில் அசைபோட்டுப் பார்த் தோமானால் இந்த உண்மையை மிகத் தெளிவாக உணரலாம். இதே காரணத்தினால்தான் துன்பியல் நாயகன் என்பவன் தனது தனி நபர்ப் பண்புகளைப் பொறுத்திராது மக்கள் மனத்தில் இடம் பெறுகின்றான். அவன் எதற்காகப் போராடி மடிகிறானோ அதன் வரலாற்று முக்கியத்துவத்தாலேயே அவன் மதிக்கப் படுகிறான். அதனால் தான் கொள்ளை அடித்துக் கொடுமைகள் புரிந்தவனாக . இருந்தாலும் கான்சாகிபும், கட்டபொம்மனும் தங்கள் மேலாதிக்க எதிர்ப்பு வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையில் துன்பியல் நாயகர்களாக உயர்கின்றனர். . - எனினும் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே இத்தகைய புதிய சக்திகளின் பிரதிநிதிகள் மட்டுமே துன்பியல் நாயகர்களாக உயர்கிறார்கள் என்பதில்லை. புதிய வளர்ச்சியைக் கணக்கிலெடுக் காத பழமையின் செயற்பாடுகள் கூட சில சந்தர்ப்பங்களில் துன்பியலில் முடியலாம். இதன் பொருள் வரலாற்று நியாயமாகத் தோன்றியுள்ள புதுமையின் செயற்பாடுகளுக்கெதிராக பழமையைத் தக்க வைக்கும் நோக்குடன் அதனால் லாபமடையும் சக்திகள் I08