பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடிவெடுத்தது. இதன் விளைவான நிலவுடமைச் சிதறலில் பழைய நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட கால கட்டத்திய நாட்டார் இலக்கிய வெளிப்பாடே கதைப் பாடல்கள் என நிறுவுகிற அறிஞர் கேசவனின் கருத்து (கதைப்பாடல்களும் சமூகமும்-தோழமை வெளியீடு) ஏற்புடையது. சாதி, பெண்ணடிமை போன்ற நிலவுடமை மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் சகதிகளும், சுரண்டல் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த உள்ளுர் ஆதிக்க சகதிகளும் வலு குறைவானவர்களாக இருந்தாலும் அன்றைய வரலாற்றுக் கடமையைப் புரிந்தவர்கள் என்பதால் அவர்களின் மரணங்களும் வீழ்ச்சிகளும் வெறும் தற்செயல் நிகழ்ச்சி களாக அமையாமல் வரலாற்றுமுக்கியத்துவத்துடன் கூடிய துன்பியல் நிகழ்ச்சிகளாக அமைந்தன. இதற்கு முன்பு கூட சாதி மீறிய திருமணங்கள் மரணத்தில் முடிந்திருக்கலாம்; வேற்றரசர்களுடன் போரிட்டு மன்னர்கள் மடிந்திருக்கலாம். எனினும் அவை தற்செயல் மரணங்களாகத்தான் அமைந்திருக்குமேயொழிய தற்செயலானது, அவசியத்துடன் பொருந்துகிற துன்பியல் இலக்கியத் தகுதி பெறும் மரணங்களாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இக்கதைப் பாடல்களில் துன்பியற் செறிவைக் குறைக்கின்ற சமரசப் போக்குகளும் வெளிப்படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். கட்டபொம்மனைப் புகழும் அதே கதைப் பாடல் வெள்ளைக்காரனையும் புகழ்கிறது. கான்சாகிபைப் புகழும் அதே பாடல் அவன் வீழ்ச்சிக்குக் காரணமான தாண்டவராய முதலி, ஆற்காட்டு நவாப் ஆகியோரை யும் புகழ்கிறது. மதுரை வீரன், காத்தவராயன் போன்றோருக்கு உயர் குடிப் பிறப்பு விருத்தாந்தங்கள் கூறி சாதி எதிர்ப்பு மழுங்கடிக்கப் படுகிறது. பார்ப்பனர்களை முரண்பாடில்லாமல் அனைத்துக் கதைப் பாடல்களும் வெறுப்புடன் அனுகினாலும் பார்ப்பன நிலப்பிரபுத் துவ மதிப்பீடுகளாகிய உடன்கட்டை ஏறுதல் போன்றவை விதந்து போற்றப்படுகின்றன. - ஆளும்வர்க்க விழுமியங்கள் நாட்டார் விழுமியங்களில் ஊடுருவு வதின் விளை பொருளாகவே இதனை நாம் காணவேண்டும். கதைப் LTLäägåså 2 fl 133 (pamp (Literary Mode of production), வினியோகம், நாட்டார்கருத்து நிலை (Folkideology) ஆகியவற்றின் அடிப்படையில் நாம் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். Ił0