பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்களுக்கும் இதர நாட்டார் தனிப்பாடல்களுக்கு மிடையில் உற்பத்தி முறையில் வேறுபாடுண்டு. இயல்பான சமூக நடைமுறைகளில் தங்கள் ஆதங்கத்தைத் தயக்கமின்றி தனிப்பாடல் களில் கிராமப்புற அடித்தட்டு வர்க்கம் வெளிப்படுத்துகிறது. ஆனால் புலமை சார்ந்த கிராமப்புறப் புலவர் ஒருவரால் கிராமப்புற ஆளும் வர்க்கம் உள்ளிட்ட கிராமப்புற நுகர்வோர் முன் நிகழ்த்தும் நோக்குடன் கதைப் பாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் விளைவே துன்பியலின் செறிவைக் குறைக்கும் சமரசப் போக்குக் களாகும். Δ கோ. கேசவனின் 'கதைப் பாடல்களும் சமூகமும்' என்னும் நூலுக்கு முன்னுரை எழுதுவதற்குக் கதைப் பாடல்கள் அனைத்தையும் பயின்றபோது இக்கட்டுரையை எழுத நேர்ந்தது. இக்கட்டுரைச் செய்தி அந்நூலில் விரிவாக ஆராயப்படுகிறது. III