பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போல் கண்களில் ஈரம். வாடாத சிரிப்பு. மின்னல் பாய்ச்சலில் வாக்கு அடிக்கும். சாவன்னா மேழி புடிச்சு உழுதால் கலப்பை திணறும். சாவன்னா உழுது விதைச்சாத்தான் இந்த வருஷம் விளையும். முதல் விதைப்பை சாமிநாயக்கர்தான் ஆரம்பிச்சு வைக்கணும். விடியக் கருக்கலில் பணஏர் அமர்த்தி அடே... அய்யா. உழுது விடுங்கப்பா.... ஒத்தமாட்டுக்காரனை.... கொஞ்சம். கவனிச்சு... பாருங்கப்பா... என்றார். திம்முரெட்டி பேரம் பேசினான். முடியாது முடியாதென்று மண்டையை உலுப்பினான். உதட்டைப் பிதுக்கினான். ‘என்னப்பா அநியாயமா இருக்கு... இருக்கிறது ஒன்றை ஏக்கர். தேக்கங்குச்சிய வச்சு சீச்சிக்கிட்டு போறதுக்கு முப்பது ரூவாயா... பத்து வருஷத்து தீர்வை போட்டுரலா மேப்பா...' என்று வாயைத் திறந்தார் சாமிநாயக்கர். பனைமரங்களுக்கு இடுவலில் ஏர்க்கலப்பை நகர்ந்து கொண்டிருந்தது. ஒலைகள் சரசரத்தன. மே காத்து தரையை உரசியது. பனை உச்சியில் சூரியன் ஆடிக்கொண்டிருந்தான். புஞ்சைக்குள் பச்சை லங்கோடு அசைந்தது. உழவு மாடுகள் மூக்கந்தண்டு வலிக்க உழைத்து, நுங்கு நுரைதள்ளி நூல் நூலாய் வடிகிறது எச்சில். மாட்டை நிறுத்தி தடவிக் கொடுத்தான் திம்முரெட்டி. சாமிநாயக்கர் குடைக் கம்போடு வந்து கொண்டிருந்தார். 'என்னப்பா... திம்முரெட்டி... என்னப்பா இது... நடக்கமாட்டாத மாட்டுக்கு முப்பது ரூவா கேக்கயே. நான் எங்க போயி முட்ட...' 'அட என்ன பெருசு... ஊரான் மாட்டை பல்லப்புடிச்சு பாப்பயோ...' என்று மூக்கை சினந்தான் திம்முரெட்டி. எலே கொண்டாலே மாட்டெ கூறுகெட்ட பிலே. w என்னலே இது உழவு. மாடு மோண்டமாதிரி. எலே திம்முரெட்டி மேழிய இப்பிடி புடி... இப்பிடி புடி.... அழுத்திப் புடிலே...' 'நெஞ்சுத் தடத்தை ஊணி தம்பிடிச்சு உழுங்கடா... அதாண்ட உழவு. கருப்பக் காட்டத்தான உழுரீக. புடிச்சு மோளத் தெரியாத பயல்லாம் மேழி சுத்த வந்திட்டாம் பாரு...' . 11