பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போகிறது? எதற்காகப் போகிறது? நிலையற்ற அந்தக் கடலை சந்திப்பதற்காக தனது வடநிலக் குளிர்த்தொடக்கங்களை எவ்வாறு உதறியது? இரவு வந்தது; அந்த இரவு, நீ புனிதமாகவும் கண்ணியமாகவும் இருக்கக்கண்டது. மகிழ்ச்சிக் களிப்பினால் உனது விழிகண்ணாடியானது! அதிலே எனது ஆத்மா பிரதிபலித்தது. உனது கரங்களில் காதலை உணர்ந்தேன்நான். எனது கூந்தலுக்குள், அதன் ஒவ்வொரு தனித்தனி இழையையும் அறிந்து கொள்ளும் பாவனையில் உனது இதயத்தைச் சுற்றிப் பட்டுநூல்போல் அவற்றைக் கட்டுகிற மாதிரி உனது கைவிரல்கள் அலைந்தன. புனிதக் காதலின் மாந்ரீகத்தை ஒரு பழம் பூசாரி பாடுவது போல நீ முணுமுணுத்தாய். ஒரு ரகசிய கீதம் என் குருதியின் ஊடே வளையமிட்டது. யாராக இருந்தாய் நீ? உலகம் தோன்றுவதற்கு முன்பு அப்போதுதான் படிந்த பணிபோலும் புதியதாக உனது காலடிப் பதிவுக்காக நான் காத்திருந்ததற்கு முன்பு எனக்கு நீ என்னவாக இருந்தாய்? தூய வெள்ளி போல நீ ஒரு புதிய சித்திரம் செதுக்குவாய் என்று உனக்காக மட்டுமே காத்திருந்தேன் நான். உன்னை அர்ச்சனை செய்ய என்னிடம் இருந்த காதற் பூவை முளைவராத ஒரு விதைக்குள் பாதுகாத்து வைத்திருந்தேனேஅப்போது என்னைக் காதலித்தாயா நீ....2) கடைசியில் நட்சத்திரங்கள் உறைந்து போய் பாதை அடைபட காலம் நின்று விடுமே அப்போதும் என்னைக் 122