பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எனக்கு வேண்டாம். எனது காதல் இங்கே உனது உறங்கும விழிகளுக்குள்ளே இருக்கிறது. ஆதலால், நாம் புறப்பட்டோம் தலையூற்றிலிருந்து வெளிப்பட்ட இரண்டு நதிகளைப் போல நீ உனது, பணியைத் தொடர நான், நான் ஒரு பெண்என்ன செய்ய முடியும் என்னால்? 1. காதலிக்க முயன்றேன் நான். 3 காதலுக்குப் பல முகங்கள் ஜூன் மாதத்தில்மல்பெரி மரங்களை முற்றுகையிடும் புறாக்களைப் போல கடலைத் தகர்க்கும் வெள்ளி மீன்கள் போல எண்ணற்றவை அன்போடு அவற்றுள்ளே நோக்கினால் உனது முகத்தையே காணலாம் நீ. நிறைவேறாத தாயன்பின் துடிப்புகள் சில எனது மலட்டுக் கருவறையில் இருந்து கட்டவிழ்ந்து எனது குருதியோடே அருவியானது நீ என்னவன் ஆக்கப்பட்டாய் (கவனி, உன்னவள் ஆனேன் என்று நான் சொல்லவில்லை) தாயன்போடு, உனதுடலை திக்குமுக்காடச் செய்தேன் - எல்லாவற்றிற்கும் மேலாக எனது மார்பையே விரும்பி எதிர் கொண்டாய் பயன்படுத்திய உனது தோட்டத்திலிருந்து உன்னால் வளர்க்கப்பட்டு நீ பறிக்கும் ஒரு ரோஜாப்பூவாக இருப்பதற்கு ஏங்கினேன். ஆனால், என்னை மாத்திரம் அல்ல எனது சகோதரிகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுகிற ஆசையை உனது பதினாலு வயது முதலே - நீ நங்கூரம் இட்டிருந்ததை அறிந்தேன். உனது விழிகள் 134